Friday, December 05 2025 | 08:13:37 PM
Breaking News

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Connect us on:

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும்காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில்பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தமக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்காள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.”

About Matribhumi Samachar

Check Also

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான  கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது …