Sunday, December 29 2024 | 10:37:20 AM
Breaking News

இந்திய தர கவுன்சிலின் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவராக டாக்டர் சந்தீப் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்

Connect us on:

புகழ்பெற்ற மருத்துவ நிபுணரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட  தலைவருமான டாக்டர் சந்தீப் ஷா, இந்திய தர கவுன்சிலின் அங்கமான சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.எல்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சோதனை மற்றும் அளவுத்திருத்த சேவைகளின் தரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு செயல்படுகிறது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் நம்பிக்கையை  இது உறுதி செய்கிறது.

அகமதாபாதின் பி.ஜே மருத்துவக் கல்லூரியில் எம்.டி நோயியல் மற்றும் கிருமி இயலில் தங்கப் பதக்கம் பெற்ற டாக்டர் ஷா, நோயியல், மூலக்கூறு உயிரியல், நோயெதிர்ப்பியல் ஆகியவற்றில் விரிவான கல்வியையும், தொழில்முறை பின்னணியையும் கொண்டவர். இவர் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸில் இணை நிர்வாக இயக்குநராகவும், நியூபெர்க் சுப்ராடெக்  ஆய்வகங்களின் நிறுவனராகவும் உள்ளார். மேலும், சிறுநீரக நோய்கள் நிறுவகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  கௌரவ இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

டாக்டர் ஷா, பேராசிரியர் சுப்பண்ணா அய்யப்பனுக்குப் பிறகு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆய்வகங்கள் அங்கீகார மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், பல்வேறு வழிகாட்டுதல் பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு: 2023-24

கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இயல்பு நிலைமை திரும்பியுள்ள நிலையில், குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்து கணக்கெடுப்புகளை நடத்த மத்திய …