Thursday, January 01 2026 | 11:56:22 AM
Breaking News

நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2024-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த ஆண்டு இறுதி அறிக்கை

Connect us on:

நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 2024-ம் ஆண்டின் முக்கிய செயல்பாடுகள், பணிகள், சாதனைகளில் சில:

*நிர்வாக சீர்தி்ருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 100 நாள் செயல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது.

*மும்பையில் 27-வது தேசிய மின் ஆளுமை மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

* பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான தீர்ப்பதற்கான தேசிய பயிலரங்கு நடத்தப்பட்டது.

*தூய்மையை நிறுவனமயமாக்கவும், நிலுவையில் உள்ள குறைகளைக் குறைக்கவும் சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக நடத்தப்பட்டது

*குவஹாத்தியிலும் ராய்ப்பூரிலும் நல்லாட்சி நடைமுறைகள் தொடர்பான மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

IIAS- DARPG மாநாடு 2025, பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் இலங்கை, மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பு

அபினவ் பஹல் தொடர், தேசிய நல்லாட்சி மற்றும்மின்-ஆளுமை வெபினார் தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

* 2024 ஏப்ரல் 22 முதல் 24 தேதி வரை லண்டனில் நடைபெற்ற பொதுச் சேவைத் தலைவர்கள், காமன்வெல்த் நாடுகளின் அமைச்சரவையின் செயலாளர்களின் மாநாட்டில், “சிபிஜிஆர்ஏஎம்எஸ் அதிநவீன குறை தீர்க்கும் அமைப்பு”, குறை தீர்ப்புக்கான உலகளாவிய சிறந்த நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டது.

*2024 ஆம் ஆண்டில், சிபிஜிஆர்ஏஎம்எஸ் தளத்தில் பெறப்பட்ட 24 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைகளில் 98% குறைகள் சராசரியாக 12 நாட்களுக்குள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன.

*பொதுமக்களின் குறைகளை சரியான நேரத்தில், சிறந்த முறையில் தீர்ப்பதற்காக 2024 ஆகஸ்ட் 23 அன்று பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான விரிவான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது.

*குறை தீர்க்கும் மதிப்பீடும் குறியீடும் (GRAI) 2024 நவம்பர் 18 அன்று வெளியிடப்பட்டது.

* “பொதுமக்கள் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்தல்” குறித்த தேசிய பயிலரங்கு 18 நவம்பர் 2024 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டது.

* அரசு ஊழியர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுகள் நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 2025 ஏப்ரல் 21 அன்று விருதுகள் வழங்கப்படும்

* சிறப்பு இயக்கம் 4.0, 2024 அக்டோபர் 2-31 காலகட்டத்தில் நடைபெற்றது. இது செறிவூட்டல் அணுகுமுறையைப் பின்பற்றி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

* சிறப்பு இயக்கம் 4.0,  5.97 லட்சம் அலுவலக இடங்களில் நடத்தப்பட்டது, 189.75 லட்சம் சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது. 45.1 லட்சம் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. தேவையற்ற பொருட்கள் அகற்றல் மூலம் ரூ .650 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

* ஒட்டுமொத்தமாக, சிறப்பு இயக்கம் 1.0 முதல் 4.0 வரை (2021-2024) ரூ .2364 கோடி ஈட்டி, 643.8 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

*சிறப்பு இயக்கம் 4.0 குறித்து பிரதமர் 2024 நவம்பர் 10 அன்று எக்ஸ் பதிவில் பாராட்டுத் தெரிவித்தார்.

*2024 நவம்பர் 24 தேதியிட்ட மனதின் குரலில் சிறப்பு இயக்கத்தின் பலன்களையும் பிரதமர் பாராட்டினார்.

மின்-அலுவலக பகுப்பாய்வு – செயல்படுத்தலுக்கான தேசிய பயிலரங்கு 29.10.2024 அன்று நடத்தப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுமத்தின் கூட்டத்தில், பாதுகாப்புப் படைகளின் பல்வேறு …