எஃகு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆர்என்ஐஎல்-ன் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (EIL) பொதுத் துறை நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) -2024 டிசம்பர் 28 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் உள்ள நிர்வாகக் கட்டிடத்திலிருந்து இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு அஜித் குமார் சக்சேனா தலைமை வகித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இஐஎல் பங்குதாரர்கள் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2023-24 ஆம் ஆண்டில், இஐஎல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் முந்தைய ஆண்டு ரூ. 126.36 கோடியிலிருந்து ரூ. 171.63 கோடியாக உயர்ந்தது.