2024 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் முக்கிய முயற்சிகள், சாதனைகள் பின்வருமாறு:
*ஐந்து ஆண்டுகளில் முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இன்டர்ன்ஷிப்களை வழங்க பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் தொடங்கப்பட்டது
*ஐஇபிஎஃப்ஏ பன்மொழி ஐவிஆர்எஸ் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட குறை தீர்க்கும் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது
*நொடித்துப் போதல் – திவால் விதிகளின் கீழ் சிறந்த செயல்திறனுக்காக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளம் உத்தேசிக்கப்பட்டுள்ளது
*ரூ.10.22 லட்சம் கோடி மோசடி வழக்குகளுக்கு ஐபிசி தீர்வு கண்டது
* நாடு தழுவிய மின்-படிவ செயலாக்கத்திற்காக மத்திய செயலாக்க மையம் (CPC) தொடங்கப்பட்டது
*இந்திய கணக்கியல் தரநிலைகளில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
*கார்ப்பரேட் தவறுகளுக்கு முகமற்ற தீர்ப்பு செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது
*சிறந்த நிறுவனங்களில் பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் 2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது ஐந்து ஆண்டுகளில் முன்னணி 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், இளைஞர்கள் பல்வேறு தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் நிஜ வாழ்க்கை வணிக சூழலுக்கு வெளிப்பாட்டைப் பெறுவார்கள்.
பயிற்சியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ .5,000 நிதி உதவி வழங்கப்படும். இதில் ரூ. 4500 மத்திய அரசால் வழங்கப்படும். மேலும் நிறுவனம் தனது சிஎஸ்ஆர் நிதியிலிருந்து மாதத்திற்கு ரூ. 500 செலுத்தும்.
கூடுதலாக, இன்டர்ன்ஷிப் பணியில் சேரும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்.சி.ஏ) ஒரு முறை மானியமாக ரூ.6,000 வழங்கும்.
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் இன்டர்ன்ஷிப்பின் காலம் 12 மாதங்கள் ஆகும்.
2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டம், 3 அக்டோபர் 2024 அன்று இணையதளம் மூலம் தொடங்கப்பட்டது.
www.pminternship.mca.gov.in. நிறுவனங்கள் இந்த தளத்தில் சுமார் 1.27 லட்சம் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வெளியிட்டுள்ளன.
ஏறக்குறைய 4.87 லட்சம் இளைஞர்கள் தங்களை தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
*பிரிக்ஸ் நாடுகளிடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் போட்டி பிரச்சினைகள்” குறித்த ஆய்வை சிசிஐ தொடங்கியது.
*கடந்த இரண்டு ஆண்டுகளில், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 148 உடன் இணக்கத்தை அமைச்சகம் கணிசமாக மேம்படுத்தியுள்ளது.