இந்திய எஃகு நிறுவனம் லிமிடெட்டுக்கு 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்திற்கு பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த இடத்திற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் இந்தியாவில் உள்ள பணிபுரிவதற்கு சிறந்த இடம் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய எஃகு நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ள இரண்டாவது சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலகட்டத்திற்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு சான்றிதழ்களைப் பெற்றது என்பது உலகளவிலான அங்கீகாரம், பணியிடச் சூழல், நகர்ப்புற அடிப்படையில் ஊழியர்களுக்கான நெகிழ்வுத்தன்மையுடன் பணி நேரங்கள், கற்றல் மையம், மின்னணு பாடசாலா திட்டம் மூலம் சுயமாக கற்றுக் கொள்ளுதல், நாஸ்காம் அமைப்புடன் உயர்தர தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பயிற்சி, தலைமைத்துவ பண்பு, பணியாளர் உதவித் திட்டங்களின் கீழ் சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், உள்ளிட்ட நிறுவனத்தின் மனிதவள முயற்சிகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இத்தகைய முயற்சிகள் உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஊழியர்களைத் தயார்படுத்துவது, அவர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
Matribhumi Samachar Tamil

