Thursday, January 15 2026 | 12:45:50 AM
Breaking News

டிசம்பர் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களின் மாதாந்திர உற்பத்தி மற்றும் விநியோக சாதனை

Connect us on:

நாட்டின் நிலக்கரி உற்பத்தி மற்றும் நிலக்கரி விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அறிவிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது. 2024 டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் நிலக்கரி உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு, தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து விநியோகம் செய்யப்படுவதைக் காட்டுகின்றன, இது இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.

2024 ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை மொத்த நிலக்கரி உற்பத்தி 131.05 மெட்ரிக் டன்னை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 97.665 மெட்ரிக் டன் அளவோடு ஒப்பிட 34.20% அதிகரிப்பைக் குறிக்கிறது.

2024 டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாதாந்திர நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 18.40 மெட்ரிக் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சாதனை முந்தைய அனைத்து பதிவுகளையும் தாண்டிய சாதனையாகும். தினசரி சராசரி உற்பத்தி 0.594 மெட்ரிக் டன்னாகவும், 2023 டிசம்பர் மாதத்தில் தினசரி சராசரியான 0.445 மெட்ரிக் டன்னோடு ஒப்பிட 30.75% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2024 டிசம்பர் மாதத்தில் 17.67 மெட்ரிக் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டது. இது 2023 டிசம்பர்   மாதத்தில் தினசரி சராசரியான 0.426 மெட்ரிக் டன்னிலிருந்து 33.20% அதிகரிப்பைக் குறிக்கிறது.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …