Thursday, January 09 2025 | 02:51:50 AM
Breaking News

ஃபேம்-2 திட்டத்தின் கீழ் 16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை

Connect us on:

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தத் திசையில்,மின்சார வாகனங்களுக்கான தேவை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் ஃபேம் இந்தியா (FAME India)  திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக  2015 ஏப்ரல் 1 முதல் தொடங்கி 2 ஆண்டு காலத்திற்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக இரண்டாம் கட்டமாக ஃபேம்  திட்டம் 2019 ஆம் ஆண்டில் ரூ.11,500 கோடி செலவில் தொடங்கப்பட்டது.

அக்டோபர் 31, 2024 நிலவரப்படி, மானியங்களுக்காக ரூ.6,577 கோடி, மூலதன சொத்துக்களுக்காக ரூ.2,244 கோடி மற்றும் பிற செலவுகளுக்காக ரூ.23 கோடி உட்பட மொத்தம் ரூ.8,844 கோடி செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் 16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 14.27 லட்சம் இருசக்கர வாகனங்கள்,  1.59 லட்சம் 3 சக்கர வாகனங்கள், 22,548 நான்கு சக்கர வாகனங்கள் 5,131 மின்சார பேருந்துகள் அடங்கும். கூடுதலாக, 10,985 மின்னூட்ட நிலையங்கள்  அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.  மின்வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியைக் குறைத்தல் மற்றும் மாநில மின்வாகனக் கொள்கைகளை செயல்படுத்த ஊக்கப்படுத்துதல் போன்ற குறிப்பிடத்தக்க  முயற்சிகள் இதற்காக எடுக்கப்பட்டுள்ளன. இது  நிலையான போக்குவரத்துக்கான இந்தியாவின் இடைமாற்றத்துக்கூறுவதற்கு உதவுகிறது.

About Matribhumi Samachar

Check Also

ஸ்டார்ட்-அப் நிலைத்தன்மைக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் யோசனை

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு …