Tuesday, January 07 2025 | 03:23:47 AM
Breaking News

ஒய்எஸ்ஆர் கடப்பாவில் ஆஸ்பைரேஷனல் மாவட்ட திட்டத்தின்கீழ் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்

Connect us on:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தனது பயணத்தின் போது ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.

2018-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய முன்முயற்சியின் கீழ் ஒய்எஸ்ஆர் கடப்பா ஒரு ஆஸ்பைரேஷனல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. சுகாதாரம், கல்வி, வேளாண்மை, உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் உற்பத்தி சாதனைகளை இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்தியது. சமூக-பொருளாதார குறியீடுகளை மேம்படுத்துவதில் மாவட்டத்தின் சிறப்பான முன்னேற்றத்தை டாக்டர் ஜிதேந்திர சிங்,பாராட்டினார்.

ஒய்எஸ்ஆர் கடப்பாவை ஆந்திரப் பிரதேசத்தில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, கூட்டு ஆளுகையின் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த மாவட்டத்தில் 100% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளது. இது மாநில, தேசிய அளவிலான சராசரிகளைவிட அதிகமாகும். மேலும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு  0.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 9-11 மாத வயதுடைய குழந்தைகளுக்கு தற்போது 99% முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பு மற்றும் 96% கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் முதல் மூன்று மாதங்களில் கர்ப்பகால கவனிப்பைப் பெறுவதால், ஒய்எஸ்ஆர் கடப்பா, தாய்-சேய் சுகாதார அம்சங்களில் இலக்குகளை எட்டியுள்ளது. ஊட்டச்சத்து இயக்கம், ஆயுஷ்மான் பாரத் போன்ற முன்னோடித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதும், வலுவான உள்ளூர் சுகாதார உள்கட்டமைப்பும் இந்த சாதனைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

About Matribhumi Samachar

Check Also

மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் இன்று நடத்தியது

மின்மாற்றிகளின் சோதனை பற்றிய  கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் தேசிய சோதனை அமைப்புடன் இணைந்து சென்னையில் இன்று நடத்தியது. …