Sunday, January 05 2025 | 07:17:17 AM
Breaking News

இந்திய பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல்

Connect us on:

2023 அக்டோபர் மாதம் முதல் 2024 செப்டம்பர் வரையிலான குறிப்பு காலத்தை உள்ளடக்கிய சட்டப்படி இணைக்கப்பெறாத தொழில் நிறுவனங்களின் ஆண்டுக் கணக்கெடுப்பு முடிவுகளை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விரிவான கணக்கெடுப்பு  வேளாண்மை சாராத இணைப்புக்கு உட்படாத தொழில் துறையின் பொருளாதார மற்றும் செயல்பாட்டு நடவடிக்கையை எடுத்துக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலப்பரப்பு ஆகியவற்றில் அதன் முக்கியமான பங்களிப்பை இந்த அறிக்கை விளக்குகிறது.

சட்டப்படி இணைக்கப்பெறாத தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2022-23-ல் 6.50 கோடியாக இருந்தது  2023-24-ல் 7.34 கோடியாக அதிகரித்துள்ளது. இது12.84% அதிகரிப்பாகும்.

பிற சேவைகள் துறையில் நிறுவனங்களின் எண்ணிக்கை 23.55% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையில் 13% அதிகரிப்பு காணப்படுகிறது.

இத்துறையில் வேலைவாய்ப்பும் கணிசமாக வளர்ந்துள்ளது, 2023-24-ம் ஆண்டில் 12 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். இது முந்தைய ஆண்டை விட ஒரு கோடிக்கும் அதிகமாகும்.

பிற சேவைகள் துறை வேலைவாய்ப்பில் 17.86% வளர்ச்சி பெற்றது. அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையில் 10.03% உயர்வு காணப்பட்டது.

பெண்களுக்கு சொந்தமான தனிஉரிமை நிறுவனங்கள் 2022-23-ல் 22.9% மாக இருந்த நிலையில் அது 2023-24 ல் 26.2% ஆக அதிகரித்துள்ளது.

ஒரு பணியமர்த்தப்பட்ட தொழிலாளியின் சராசரி ஊதியம் 13% அதிகரித்துள்ளது, இது மேம்பட்ட ஊதிய நிலைகளை பிரதிபலிக்கிறது மற்றும் பொருளாதார தேவையை வலுப்படுத்துகிறது. உற்பத்தித் துறையில் மிக அதிகபட்ச ஊதிய வளர்ச்சி 16%-க்கும் மேலாக பதிவாகியுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

2024-ம் ஆண்டில் நிலக்கரித் துறை இதுவரை இல்லாத அதிகபட்ச உற்பத்தி மற்றும் விநியோகத்தை எட்டியுள்ளது

நிலக்கரி அமைச்சகம் 2024 காலண்டர் ஆண்டிற்கான நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மிகச் சிறப்பான  முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளது. எரிசக்தி பாதுகாப்பை …