உள்துறை அமைச்சகத்தின் 22.07.2025 தேதியிட்ட அறிவிப்பின்படி குடியரசு துணைத் தலைவர் இடம் காலியாக உள்ளது. 1952 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் சட்டத்தின் பிரிவு 4 இன் துணைப் பிரிவு (1) மற்றும் துணைப் பிரிவு (4) விதிகளின்படி, அவ்வாறு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப குடியரசுத் துணைத் த லைவர்தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை அந்த காலியிடம் ஏற்பட்டவுடன் விரைவில் வெளியிட வேண்டும். இதையடுத்து, 17வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இதன்படி செப்டம்பர் 9, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். தேர்தலுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21, 2025 (வியாழக்கிழமை). ஆகஸ்ட் 22 அன்று விண்ணப்பங்கள் சரி பார்க்கப்படும். விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 25, 2025 (திங்கள்).
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 66 இன் படி, ஒற்றை மாற்றத்தக்க வாக்கு மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும் கொண்ட தேர்தல் கல்லூரி உறுப்பினர்களால் குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2025 ஆம் ஆண்டுக்கான 17வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
*233 தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் (தற்போது 05 இடங்கள் காலியாக உள்ளன),
*12 மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் மற்றும்
*543 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் (தற்போது 01 இடம் காலியாக உள்ளது).
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 788 உறுப்பினர்கள் (தற்போது, 782 உறுப்பினர்கள்) தேர்தல் வாக்காளர் குழுவில் உள்ளனர். அனைத்து வாக்காளர்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களாக இருப்பதால், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.
Matribhumi Samachar Tamil

