Wednesday, January 08 2025 | 04:41:33 AM
Breaking News

புத்தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், புத்தொழில் கொள்கை அமைப்புடன் டிபிஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Connect us on:

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வியாழக்கிழமை அன்று இந்தியாவின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற புத்தொழில் கொள்கை அமைப்புடன் (எஸ்பிஎஃப்) வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய புத்தொழில் வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜனவரி 15-16 தேதிகளில் பாரத் மண்டபத்தில் நிறுவனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. இந்த நிகழ்வு டிபிஐஐடி, எஸ்பிஎஃப் இடையே புதிய ஒத்துழைப்புகளை அறிவிக்க ஒரு அர்த்தமுள்ள தளத்தை வழங்கும். கூடுதலாக, எஸ்பிஎஃப், டிபிஐஐடி-யுடன் இணைந்து சிறப்பு அதிவேக திட்டங்களை ஏற்பாடு செய்யும். இது உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு இந்திய புத்தொழில் நிறுவனங்களுடன் சேரவும், நாடு முழுவதும் இருந்து வெளிவரும் அற்புதமான கண்டுபிடிப்புகளை நேரடியாகக் காணவும் உதவும்.

நிகழ்ச்சியில் பேசிய புத்தொழில் இந்தியாவின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், எஸ்பிஎஃப் உடனான இந்த உத்திபூர்வ ஒத்துழைப்பு, புத்தொழில் நிறுவனங்கள் செழித்து வளரவும், உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக மாறுவதற்கான இந்தியாவின் நோக்கத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கவும், ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கவும் வகை செய்யும். இந்த விஷயத்தில், டிபிஐஐடி-யின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

குடியரசுத்தின விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு

இந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, குடியரசுத்தலைவரின் அலுவலகம் மூலம் நாட்டின் பல்வேறு …