மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தை இன்று பார்வையிட்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, என்.ஐ.இ.பி.எம்.டி.க்கு வழங்கப்பட்ட தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுமத்தின் (என்ஏஏசி) சான்றிதழை வெளியிட்டார். இது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் கொண்ட நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஆட்டிசம் மேலாண்மை குறித்த இ- புத்தகத்தையும் வெளியிட்டார்.
டாக்டர் வீரேந்திர குமார் என்.ஐ.இ.பி.எம்.டி வளாகத்தில் தேசிய திறந்தநிலை பள்ளியின் (என்.ஐ.ஓ.எஸ்) மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு கல்வியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப தரமான கல்வி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை பெறுவதை உறுதி செய்கிறது.
இந்த ஆண்டு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி பெற்று பதக்கங்களை வென்ற பல்வேறு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டிய அவர், திறமையை வளர்த்து கொள்வதிலும், விளையாட்டில் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவிப்பதிலும் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, என்ஏஏசி சான்றிதழ், பயிற்சி, ஆராய்ச்சி, மறுவாழ்வு சேவைகளில் உயர் தரத்தை பராமரிப்பதற்கான என்.ஐ.இ.பி.எம்.டி.-ன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். என்.ஐ.ஓ.எஸ் மையத்தை தொடங்குவதன் மூலம், கல்வி கற்பதில் உள்ள இடைவெளியை குறைப்பதிலும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார். உள்ளடக்கிய, நெகிழ்வு தன்மையுடன் கூடிய கற்றல் முறைகளை வழங்குவதன் மூலம், ஒரு சமமான, உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் அரசின் பார்வையுடன் ஒத்துப்போகிறது. பல்வேறு குறைபாடுகள் கொண்ட திறமையான நபர்களை ஊக்குவிக்கும் வகையில் என்.ஐ.இ.பி.எம்.டி மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
Matribhumi Samachar Tamil

