உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியில் பிராந்திய திறன் மேம்பாட்டிற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), வடகிழக்குப்பகுதியில் முதல் முறையாக மேகாலயாவின் நியூ ஷில்லாங் டவுன்ஷிப்பில் பிராந்திய வளாகத்தை நிறுவ உள்ளது. இதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை முறையாக கையகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி வடகிழக்குப் பகுதியில் ஐஐசிஏ-வின் நிர்வாகத்தையும் அதன் வளர்ச்சியையும் வலுப்படுத்தும்.
நில கையகப்படுத்துதல் தொடர்பான விழாவிற்கு மேகாலயா அரசின் தலைமைச் செயலாளர் திரு டொனால்ட் பிலிப்ஸ் வஹ்லாங் மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் செயலாளர் திருமதி தீப்தி கவுர் முகர்ஜி ஆகியோர் தலைமை வகித்தனர். ஐஐசிஏ-வின் தலைமை இயக்குநர் திரு ஞானேஷ்வர் குமார் சிங், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு இந்தர்தீப் சிங் தரிவால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நில ஒப்படைப்பு மற்றும் கையகப்படுத்தல் மேகாலயா அரசின் திட்டமிடல் துறையின் இணைச் செயலாளர் திரு கே. ஹினியூவ்டா, மத்திய அரசின் துணைச் செயலாளர் திரு சேகர் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விரிவாக்கம் வடகிழக்குப்பகுதியில் தொழில்முனைவோர், திறமையான தொழில் நிபுணர்கள், பொறுப்பான தொழில்துறை தலைவர்கள் ஆகியோரை ஊக்குவித்து பெருநிறுவன செயல்பாடுகளை மேம்படுத்தும் ஐஐசிஏ-வின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
Matribhumi Samachar Tamil

