“ஓஎன்டிசி, சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் இ-காமர்ஸில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது. இதனால் வளர்ச்சி, செழிப்பை மேலும் அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.”
– பிரதமர் நரேந்திர மோடி
அறிமுகம்:
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்பு (ONDC) என்பது டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் தொழில் – உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) முயற்சியாகும். இது ஏப்ரல் 2022-ல் தொடங்கப்பட்டது. ஓஎன்டிசி என்பது டிஜிட்டல் அல்லது மின்னணு கட்டமைப்புகள் மூலம் பொருட்கள், சேவைகளின் பரிமாற்றத்தின் அனைத்து அம்சங்களுக்கும் திறந்த கட்டமைப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். ஓஎன்டிசி, டிஜிட்டல் வர்த்தக சூழலில் புதுமை, உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஓஎன்டிசி முன்முயற்சி கீழ்க்கண்ட பல முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது:
*வர்த்தக ஜனநாயகமயமாக்கல்
*உள்ளடக்கம்
*செலவு திறன்
*சந்தை விரிவாக்கம்
* வாடிக்கையாளர் அதிகாரம்
இது எப்படி வேலை செய்கிறது?
பங்கேற்பாளர்களிடையே தடையற்ற தொடர்புகளை எளிதாக்க ஓஎன்டிசி திறந்த நெட்வொர்க் நெறிமுறைகளைப் பயன்படுத்துகிறது . நெட்வொர்க் வெவ்வேறு தளங்களில் இருந்து வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தரப்படுத்தப்பட்ட ஏபிஐ-களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.
ஓஎன்டிசி இந்தியாவில் நியாயமான, திறந்த, உள்ளடக்கிய டிஜிட்டல் வர்த்தக சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு படியை பிரதிபலிக்கிறது. ஏகபோக நடைமுறைகளின் சவால்களை எதிர்கொள்வதன் மூலமும், சிறிய வர்த்தகர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், இது ஈ-காமர்ஸ் சூழலை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.