Monday, December 08 2025 | 08:26:48 AM
Breaking News

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு பிரதமர் பிப்ரவரி 5-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்

Connect us on:

பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார்.

பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13, 2025) தொடங்கிய மகா கும்பமேளா 2025, உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார ஒன்று கூடலாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை தொடரும்.

இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, புனித யாத்திரைத் தலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக, டிசம்பர் 13, 2024 அன்று பிரயாக்ராஜுக்கு பயணம் செய்தபோது, ​​பிரதமர் ரூ.5,500 கோடி மதிப்பிலான 167 மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இது பொதுமக்களுக்கான இணைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தியது.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.