Tuesday, October 13 2026 | 03:04:45 AM
Breaking News

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது

Connect us on:

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.  முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பாரம்பரிய அறிவும் மக்கள் பங்களிப்பும் அவசியம்: தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்!

புதுதில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் (NGT) ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் ஆகியவற்றின் எதிர்காலம்’ (Future of Environment …