Tuesday, January 07 2025 | 03:39:12 PM
Breaking News

தேசிய மாற்றத்தின் அடித்தளமாக ஐந்து உறுதிமொழிகளை குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

Connect us on:

குடியரசு  துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “நமது தேசிய மாற்றத்தின் அடித்தளம் சமூக நல்லிணக்கம், குடும்ப அறிவொளி, சுற்றுச்சூழல் உணர்வு, சுதேசி மற்றும் குடிமைக் கடமைகள் ஆகிய ஐந்து சக்திவாய்ந்த தூண்களில் தங்கியுள்ளது. இந்த ஐந்து தீர்மானங்கள்-நமது பஞ்சபிரான்-நமது சமூகத்தின் நரம்புகளில் பாய்ந்து, தேசியவாதத்தின் வெல்லமுடியாத உணர்வை வளர்க்கிறது. தனிப்பட்ட பொறுப்பு, பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு ஆகியவற்றை கலாச்சார பெருமை, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையுடன் இணைக்கும் பயணத்தில் அவை நம்மை வழிநடத்துகின்றன,” என்று  குறிப்பிட்டார்.

பஞ்சபிரான் பற்றி மேலும் விவரித்த திரு தன்கர், “வேற்றுமையை தேசிய ஒற்றுமையாக மாற்றும் சமூக நல்லிணக்கம் அவசியம். அடிமட்டத்தில் தேசபக்தி விழுமியங்களை வளர்ப்பது நம் குடும்பங்களுக்குள் அறிவொளியுடன் தொடங்க வேண்டும். இந்த  குணங்கள் உள்வாங்கப்பட்ட நாற்றங்கால் குடும்பம். பாரத மாதாவை மதிக்கும் அதே வேளையில், நாம்  நிலையான சூழலை உருவாக்கவும் வேண்டும். சுதேசி மற்றும் தன்னம்பிக்கை தற்சார்பு இந்தியாவின் சின்னங்கள், அவை தீவிரமாக ஊக்குவிக்கப்பட வேண்டும். இறுதியில், குடிமைக் கடமைகள் ஒவ்வொரு குடிமகனையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று தில்லி கண்டோன்மென்ட்  கரியப்பா அணிவகுப்பு  மைதானத்தில் உள்ள என்சிசி தலைமையக முகாமில்  குடியரசு தின முகாம் – 2025 இன் தொடக்க விழாவில்  உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க தேச விரோத சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அழைப்பு விடுத்தார். “தாய்நாட்டிற்கான நமது அர்ப்பணிப்பு நிலையானதாகவும்,  அசைக்க முடியாததாகவும் இருக்க வேண்டும், ஏனெனில் அதுவே நமது இருப்புக்கான அடித்தளமாகவும் இருக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார். மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை அவர் எடுத்துரைத்தார், “உலகளவில் பாராட்டப்பட்ட ஒரு எழுச்சியை நாடு கண்டு வருவதால் சவால்கள் வெளிப்படுகின்றன. உலகமே பொறாமைப்படும் ஒரு எழுச்சி, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும் சாதகமாக பாதிக்கிறது, ”என்று அவர் கூறினார்.

மனித வளர்ச்சிக்குத் தேவையான நற்பண்புகளை புகுத்தும் ஒழுக்கமான சக்தியாக என்சிசி திகழ்வதற்காக அவர் பாராட்டினார். “மனித வளர்ச்சிக்கு முக்கியமான நற்பண்புகளை நீங்கள் உள்வாங்கும் மிகவும் ஒழுக்கமான சக்தியான என்சிசியின் உறுப்பினர் என்ற தகுதி உங்களுக்கு ஒரு பெரிய நன்மையை அளிக்கிறது. இந்த அமைப்பு தேசியவாதத்தையும், தேசம் முதலில் என்ற அணுகுமுறையையும் விதைக்கிறது’’ என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்தியா இனி திறன் கொண்ட தேசமாக இல்லாமல், ஒப்பிட முடியாத தேசமாக வளர்ந்து வரும் காலத்தில் நீங்கள் வாழ்வது உங்களுக்கு அதிர்ஷ்டம்” என்று அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் கட்டப்பட்ட பல விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டினார்.

என்சிசி  தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங்,  மற்றும் பிற உயரதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் : 2024- ஆம் ஆண்டின் செயல்பாடுகள்

மத்திய அரசு வர்த்தக ஒதுக்கீட்டு விதிகள், 1961-ன் படி பரந்த அளவிலான செயல்பாடுகளைக் கொண்ட சட்டம் மற்றும் நீதித்துறையின் எண்ணற்ற …