மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் நொய்டா வளாகத்தில் உள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிப் வடிவமைப்பு சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சாக்டீம்அப் செமிகண்டக்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, இந்தியாவின் குறைமின்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டு திறன்களை முன்னேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது.
மத்திய அரசின் குறைமின்கடத்தி தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்கும் வகையிலான தொலைநோக்குப் பார்வையுடன் சிப் வடிவமைப்புக்கான சிறப்பு மையத்தின் தொடக்கம் அமைந்துள்ளது.
குறைமின்கடத்தி, சிப் வடிவமைப்புத் தொழில்களில் திறமைவாய்ந்த நிபுணர்களுக்கு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய சிறப்பு மையம் தயார் நிலையில் உள்ளது. இது மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் சிப் வடிவமைப்பில் ஆராய்ச்சி, புதுமை, பயிற்சிக்கான அதிநவீன வசதிகளை வழங்குகிறது.
Matribhumi Samachar Tamil

