Monday, December 08 2025 | 07:09:57 PM
Breaking News

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

Connect us on:

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து புதுதில்லியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும், கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். மோடி அரசின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சூழல் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். ஊடுருவலை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். தீவிரவாதிகளின் இருப்பிடத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஊடுருவல்காரர்கள், தீவிரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள போதைப்பொருள் கட்டமைப்பு ஆதரவளித்து வருவதாக திரு. அமித் ஷா கூறினார். போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

புதிய குற்றவியல் சட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, தடயவியல் அறிவியல் ஆய்வகப் பணிகளில் புதிய நியமனங்களை மேற்கொள்ளுமாறு திரு. அமித் ஷா உத்தரவிட்டார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.