அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய மீன்வளத் துறையின் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்கள் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய ரூ.50 கோடி மதிப்பிலான 50 முக்கிய திட்டங்களை அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்கள் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி. பாகேல், திரு ஜார்ஜ் குரியன், இதர வடகிழக்கு மாநிலங்களின் மீன்வளத்துறை அமைச்சர்கள், மத்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலட்ச் லிக்கி உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு மாநிலங்களின் மீன்வள மேம்பாட்டிற்கான நீடித்த முயற்சிகளைத் தொடர்வதற்கு ஏதுவாக, சிக்கிமின் சோரெங் மாவட்டத்தில் இயற்கை மீன் வளர்ப்பு இடத்தொகுப்பை திரு ராஜீவ் ரஞ்சன் சிங், அறிவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக, இத் திட்டத்தின் கீழ் சிக்கிம் மாநிலத்தில் இயற்கை மீன் வளர்ப்பு மற்றும் மீன்வளத்தை மேம்படுத்துவதற்காக வடகிழக்கு மாநில கூட்டம்-2025-ஐ தொடங்கி வைத்தார். அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற மாநாடு மாநிலத்தின் மீன்வளத் துறையின் நீடித்த மேம்பாட்டை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. சிக்கிம் அரசு ஏற்கனவே இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இது நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகளுக்கு வலுவான நன்மதிப்பை உருவாக்க உதவியுள்ளது.