Friday, December 12 2025 | 02:27:10 AM
Breaking News

தொலைத்தொடர்பு தொடர்பான மோசடிகளைத் தடுக்க நடவடிக்கைகள்

Connect us on:

சைபர் குற்றம் மற்றும் நிதி மோசடிகளுக்கு தொலைத்தொடர்பு கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், குடிமக்களைப் பாதுகாக்கவும், தொலைத்தொடர்புத் துறை  பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:

போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளைக் கண்டறிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைக் கொண்டு மறுபடியும் அவற்றை சரிபார்க்க ஒரு அமைப்பை உருவாக்குதல்.

மொபைல் சந்தாதாரர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் சஞ்சார் சாத்தி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி தொடங்கப்பட்டது. இவை

சந்தேகத்திற்குரிய மோசடி மற்றும் வணிகத் தொடர்புகள் குறித்து புகாரளிப்பது, அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட மொபைல் இணைப்புகளை அறிந்து, தேவையில்லாத மொபைல் இணைப்புகள் குறித்து புகாரளிப்பது, திருடப்பட்ட / தொலைந்த மொபைல் கைபேசி குறித்து புகாரளிப்பது உள்பட பொது மக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகின்றன.

சைபர் குற்றம் மற்றும் நிதி மோசடிகளைத் தடுப்பதற்கு தொலைத்தொடர்பு வளங்களை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ள டிஜிட்டல் நுண்ணறிவு தளம் (டிஐபி) தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), மாநில/யூனியன் பிரதேச காவல்துறை, பாதுகாப்பு நிறுவனங்கள், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் உள்ளிட்ட 540 அமைப்புகள் இந்தத் தளத்தில் இணைந்துள்ளன.

அனைத்து வகையான சைபர் குற்றங்கள் குறித்தும் பொதுமக்கள் புகார் அளிக்க உதவும் வகையில், உள்துறை அமைச்சகம் தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்ட்டலை (https://cybercrime.gov.in) தொடங்கியுள்ளது.

இந்தத் தகவலை, தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் ஒராஜ்யசபாவில் இன்று ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருள் பயன்பாடு குறித்த சட்டம்

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம், 1987 – ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. இது சரக்குகளை சிப்பமாகக் கட்டுவதற்கான பொருளில் எந்த …