Sunday, May 17 2026 | 02:23:05 AM
Breaking News

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் 8794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழங்கியுள்ளது

Connect us on:

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல்  திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இணையவழியாக நடைபெற்ற நிகழ்வில் வழங்கியது. ரூ.884 கோடி கடன் அனுமதிக்காக இந்த மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இந்த ஆணையத்தின் மத்திய அலுவலகத்தில் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் மானியத் தொகையை பயனாளிகளுக்கு விடுவித்தார். ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ரூப் ராஷி மற்றும் மத்திய அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல்  திட்டம் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது மட்டுமின்றி தொழில் தொடங்குவதற்கான ஆற்றலுடனும் அவர்களை இணைக்கிறது என்று இந்த நிகழ்வில் பேசிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் கூறினார்.

நாட்டின் 6 மண்டலங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றன. இதில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் மொத்தம் 2445 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இவற்றுக்கு ரூ.80.26 கோடி மானியமாக வழங்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் 2366 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இவற்றுக்கு ரூ.91.13 கோடியும், பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்திற்கு 2167 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இவற்றுக்கு ரூ.62.68 கோடியும், ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்திற்கு 1320 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இவற்றுக்கு ரூ.41.80 கோடியும், குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்திற்கு 496 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இவற்றுக்கு ரூ.24.12 கோடியும் மானியமாக வழங்கப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

அடல் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பு மற்றும் நன்மைகள் குறித்த விளக்கப்படம்.

அடல் பென்ஷன் திட்டம் 2026: மாதம் ₹5000 ஓய்வூதியம் பெறுவது எப்படி? முழு விவரம்

இந்திய அரசின் மிக முக்கியமான சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான அடல் பென்ஷன் திட்டம் (APY), 2026-ஆம் ஆண்டிலும் லட்சக்கணக்கான …