
புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனம் திறன் மேம்பாட்டு பிரிவினை நிறுவியுள்ளதன் மூலம் மத்திய அரசின் கர்மயோகி இயக்கத்தில் இணைந்துள்ளது. இந்த முயற்சி மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம், பணியாளர், பயிற்சித் துறை ஆகியவற்றின் நெறிமுறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கர்மயோகி இயக்கம் அரசின் பொது சேவை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவதற்கான திறனை மேம்படுத்த வகை செய்கிறது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் வாயிலாக நாட்டின் கலாச்சாரம் மாண்புகளுடன் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு உதவிடும்.
பணியாளர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதன் மூலம் விதிகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் அணுகுமுறையிலிருந்து பங்களிப்பு சார்ந்த அணுகுமுறையில் பணியாளர்களை மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் அரசின் பொது சேவைகளை மக்களுக்கு திறம்படவும், பயனுள்ளதாகவும் வழங்க உதவிடும்.
இத குறித்து பேசிய ஜிப்மர் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, திறன் மேம்பாட்டு பிரிவு நிறுவப்பட்டுள்ளதன் மூலம் பணியாளர்களிடையே சிறந்த தரம் மற்றும் தன்னலமற்ற சேவையை வழங்கும் வகையில் பயிற்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து கற்பதன் மூலம், தனிப்பட்ட திறன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்வதுடன் தலைமைத்துவ பண்பையும் மேம்படுத்திக் கொண்டு தொழில்முறை சார்ந்த சூழலை வழங்க இது வகை செய்கிறது என்றும் அவர் கூறினார். ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், அவர்களது திறனை மேம்படுத்துவதுடன் தனிப்பட்ட நலன் மற்றும் மன அழுத்த மேலாண்மை மற்றும் தீர்வு காண்பதற்கான சிந்தனையை வளர்க்க உதவிடும் வகையில், இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
Matribhumi Samachar Tamil

