Friday, January 09 2026 | 01:00:21 AM
Breaking News

திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்

Connect us on:

நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை  ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள்  என்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார், மேலும் 450-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை மாணவர்கள் வைத்திருக்கும் பல்கலைக்கழகத்தின் வலுவான கண்டுபிடிப்பு கலாச்சாரத்தைப் பாராட்டினார்.

மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், சமத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகள் போன்ற அரசியலமைப்பு மதிப்புகளை மீண்டும் வலியுறுத்தினார். கல்வி என்பது பின்தங்கிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கான அடித்தளமாகவே உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் சமூகம் மற்றும் தேசத்திற்கான அவர்களின் கடமைகளை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.

About Matribhumi Samachar

Check Also

ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின் தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு …