Thursday, January 09 2025 | 12:58:42 AM
Breaking News

8 வது இண்டஸ்ஃபுட் 2025 ஐ மத்திய உணவு பதனப்படுத்தல் தொழில்கள் அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

Connect us on:

மத்திய உணவு பதனப்படுத்தல் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத் நகரில் உள்ள இந்தியா எக்ஸ்போசிஷன் மார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 8 வது இண்டஸ்ஃபுட் 2025 ஐ, 2025  நாளை (ஜனவரி 8)  தொடங்கி வைக்கிறார்.  இண்டஸ்ஃபுட் என்பது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசியாவின் முதன்மையான உணவு மற்றும் பானங்களுக்கான வர்த்தக கண்காட்சி ஆகும். இது வர்த்தகத் துறையின் ஆதரவுடன் இந்திய வர்த்தக மேம்பாட்டு குழுமத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

120,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இண்டஸ்ஃபுட் 2025 கண்காட்சியில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,300 கண்காட்சியாளர்கள் இடம்பெறுகின்றனர். இந்த ஒருங்கிணைந்த வர்த்தக கண்காட்சியில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 7,500 க்கும் மேற்பட்ட வாங்குவோர்,  உள்நாட்டைச் சேர்ந்த 15,000 வாங்குவோர் மற்றும் வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 8-10 ஆகிய நாட்களில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் இண்டஸ்ஃபுட்  உணவு மற்றும் பானங்கள் வர்த்தக கண்காட்சியுடன் கூடவே டிபிசிஐ ஏற்பாடு செய்துள்ள 4-ஆவது இண்டஸ்ஃபுட் உற்பத்தி கண்காட்சியும்(உணவு பதனப்படுத்தும் தொழில்நுட்பம், பேக்கேஜிங் தொழில்நுட்பம், பொருட்கள் மற்றும் விருந்தோம்பல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது) மற்றும் முதலாவது இண்டஸ்ஃபுட் வேளாண் தொழில்நுட்ப கண்காட்சியும் (வேளாண் தொழில்நுட்பம், மீன்வள தொழில்நுட்பம், பால் மற்றும் கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்) நடைபெறும் . இந்த இரண்டு நிகழ்வுகள் 2025 ஜனவரி 9-11 தேதிகளில் புதுதில்லியின் யஷோபூமி துவாரகாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்களை மனிதசமுதாயத்தின் நலனுக்காக சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதே சவால் – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் இனி விருப்பப்பட்டால் தேர்ந்தெடுத்துக்கொள்பவை அல்ல, அவை எதிர்காலத்திற்கான ஒரே சாத்தியமான தேர்வாகும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் …