Thursday, January 09 2025 | 12:57:17 AM
Breaking News

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள்

Connect us on:

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆய்வு, உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம், சந்தைப்படுத்துதல், இறக்குமதி, ஏற்றுமதி ஆகிய  நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. நமது பொருளாதாரத்திற்கு எண்ணெயும் எரிவாயுவும் முக்கியமான இறக்குமதி பொருட்களாக இருப்பதால், எரிசக்தி அணுகல், எரிசக்தி திறன், எரிசக்தி நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு போன்றவற்றுக்காக  அமைச்சகத்தால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் அமைச்சகம் மேற்கொண்ட முன்முயற்சிகள், திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றில் முக்கியமான சில  பின்வருமாறு:

•    பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் 10.33 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

•    சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை 2014-ல் 14.52 கோடியிலிருந்து 2024-ல் 32.83 கோடியாக உயர்ந்துள்ளது.

•    நாட்டில் செயல்பாட்டில் உள்ள இயற்கை எரிவாயு குழாயின் நீளம் 2014-ல் 15,340 கிலோ மீட்டரிலிருந்து 2024-ல் 24,945 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

•    நாடு முழுவதும் 17,400-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து பெட்ரோல் விநியோகிக்கப்படுகிறது

•    அனைத்து உஜ்வாலா பயனாளிகளுக்கும் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது.

•    அரசின் முயற்சியால் உஜ்வாலா குடும்பங்களின் எல்பிஜி பயன்பாடு அதிகரித்துள்ளது. தனிநபர் நுகர்வு, 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் எண்ணிக்கை, 2019-20-ம் ஆண்டில் 3.01 ஆக இருந்து 2023-24-ம் ஆண்டில் 3.95 ஆக உயர்ந்துள்ளது.

•    சில்லறை விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை ஊக்குவிப்பதன் கீழ், 01.12.2024 நிலவரப்படி, நாடு முழுவதும் 84,203 சில்லறை விற்பனை நிலையங்களில் 1,03,224 இ-வாலட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

•    எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் (EVCS) அமைக்கப்பட்டுள்ளன. 01.12.2024 நிலவரப்படி, நாடு முழுவதும் 17,939 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

•    பெட்ரோலியம்,  இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், இயற்கை எரிவாயு குழாய் கட்டணத்தை தீர்மானிக்கும் விதிமுறைகளை “ஒரு நாடு, ஒரு கிரிட் மற்றும் ஒரே கட்டணம்” என்ற நோக்கத்துடன் ஒருங்கிணைந்த கட்டணங்கள் தொடர்பான விதிமுறைகளை திருத்தியுள்ளது.

•    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், எண்ணெய் -இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட், கெயில் (இந்தியா) லிமிடெட், பைப்லைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், குஜராத் ஸ்டேட் பெட்ரோநெட் லிமிடெட், குஜராத் கேஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கேஸ் பைப்லைன்ஸ் லிமிடெட், ஜிஎஸ்பிஎல் இந்தியா கேஸ்நெட் லிமிடெட், ஜிஎஸ்பிஎல் இந்தியா டிரான்ஸ்கோ லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குழாய் கட்டமைப்புகளையும் தேசிய எரிவாயு தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

•    சிபிஜி ஆலையிலிருந்து நகர எரிவாயு விநியோக கட்டமைப்புக்கு குழாய் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான நிதி ஆதரவை வழங்குவதற்காக நகர எரிவாயு விநியோக (சிஜிடி) நெட்வொர்க்கில் சிபிஜியை செலுத்துவதற்கான குழாய் உள்கட்டமைப்பை (டிபிஐ) மேம்படுத்துவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

•    டிபிஐ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இணையதளம் 1 செப்டம்பர், 2024 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

•    உயிரி எரிசக்தி ஒருங்கிணைப்பு இயந்திரங்களை (BAM) கொள்முதல் செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை 2 பிப்ரவரி2024 அன்று அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

•    சிஜிடி துறையின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும், விலை ஏற்ற இறக்கத்திலிருந்து சாமானிய மக்களைப் பாதுகாக்கவும், அரசு புதிய சிஜிடி துறை எரிவாயு ஒதுக்கீடு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது,

•    எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தின் கீழ், எத்தனால் விநியோகம் 2013-14 ஆம் ஆண்டில் 38 கோடி லிட்டராக இருந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் 707.40 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது, இதன் மூலம் பெட்ரோலில் சராசரியாக 14.60% எத்தனால் கலப்பு எட்டப்பட்டுள்ளது.

•    கடந்த பத்தாண்டுகளில், எத்தனால் கலப்புத் திட்டம் ரூ.1,08,600/- கோடிக்கு மேல் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தியுள்ளது.

•    நாட்டில் ஆண்டுக்கு 256.8 மில்லியன் மெட்ரிக் டன் (MMTPA) மொத்த சுத்திகரிப்பு திறன் கொண்ட 22 செயல்பாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. பதினெட்டு சுத்திகரிப்பு ஆலைகள் பொதுத் துறையிலும், மூன்று தனியார் துறையிலும், ஒன்று கூட்டு முயற்சியிலும் உள்ளன. மொத்த சுத்திகரிப்புத் திறனான 256.8 மில்லியன் மெட்ரிக் டன்களில், ஆண்டுக்கு  157.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் பொதுத் துறையிலும், 11.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் கூட்டு முயற்சியிலும், மீதமுள்ள 88.2 மில்லியன் மெட்ரிக் டன்கள் தனியார் துறையிலும் எட்டப்பட்டுள்ளன.

•    2023-24 நிதியாண்டில் மொத்தம் 741 (132 ஆய்வு, 609 மேம்பாட்டு) கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. எரிவாயு உற்பத்தி 2022-23 நிதியாண்டில் 34.45 பிசிஎம் ஆக இருந்து 2023-24 நிதியாண்டில் 36.44 பிசிஎம் ஆக அதிகரித்துள்ளது.

•    2023-24 நிதியாண்டில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கச்சா எண்ணெய் கொள்முதலை விரிவுபடுத்தி, குறிப்பிட்ட நிலப்பரப்பை சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது.

•    எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் பல்வகைப்படுத்தலை நோக்கி மாற, இந்திய பொதுத்துறை நிறுவனங்களான ஐஓசிஎல், கெயில் ஆகியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அட்நாக் உடன் நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

•    ஜி20 உச்சிமாநாட்டின் போது மாண்புமிகு பிரதமரால் செப்டம்பர் 2023-ல் தொடங்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (GBA), குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது,. 28 உறுப்பு நாடுகள்,12 சர்வதேச அமைப்புகள் கூட்டணியில் இணைந்துள்ளன. இது தொடர்ந்து விரிவடைந்து வருகின்றது.

•    அண்டை நாடுகளுடன் எரிசக்தி தொடர்புகளை இந்தியா வளர்த்துக் கொண்டுள்ளது. நேபாளத்துடன், பெட்ரோலிய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மே 2023-ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 2024-ல் வணிக ஒப்பந்தம் கையெழுத்தானது.

•    பெட்ரோலியப் பொருட்களை வழங்குவதற்காக பூடானுடன் மத்திய அரசு ஒரு வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

•    நவம்பர் 2024-ல், பிரதமரின் அரசுமுறைப் பயணத்தின் போது, ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் கயானாவும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

•    எரிசக்தி சார்புநிலையைக் குறைத்தல்: எண்ணெய், எரிவாயு மீதான இறக்குமதி சார்புநிலையைக் குறைக்க அரசு ஒரு பல்முனை உத்தியை செயல்படுத்துகிறது.

•    பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.547.35 கோடி மதிப்பிலான ஸ்டார்ட் அப் நிதியை உருவாக்கியுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

ஸ்டார்ட்-அப் நிலைத்தன்மைக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் யோசனை

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு …