இந்தியாவில் பழங்குடியினரின் (எஸ்டி) எண்ணிக்கை 10.42 மில்லியன் ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 8.6 சதவீதமாக உள்ளது. 705 க்கும் மேற்பட்ட தனித்துவமான பழங்குடியினக் குழுக்களாக நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களுக்கு ஆதரவளிக்க சமூக பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி, அவர்களின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், கல்வியை மேம்படுத்துதல், பழங்குடி மக்களுக்கு உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, பழங்குடியினர் நல அமைச்சகம் (MoTA) துறை ரீதியான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேம்பட்ட நிதி ஒதுக்கீடுகள், பல்வேறு துறைகளுக்கிடையிலான முயற்சிகளின் ஒருங்கிணைப்பு, திட்டமிடல், செயல்படுத்தல் போன்றவற்றில் அமைச்சகம் சிறப்பாக செயல்படுகிறது.
2024-ம் ஆண்டில் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் திட்டங்கள், சாதனைகள், முன்முயற்சிகளின் முக்கிய சிறப்பம்சங்கள் சில பின்வருமாறு:
• பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு ஒதுக்கீடு 2023-24-ம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது இந்த நிதியாண்டு 45.80% அதிகரித்து சுமார் ரூ.14925.81 கோடியாக உள்ளது
• குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 10 பிப்ரவரி 2024 அன்று தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பழங்குடியினர் மஹோத்சவத்தைத் தொடங்கி வைத்தார்.
• மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2024 அக்டோபர் 2 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இருந்து தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம உத்கர்ஷ் அபியான் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
• அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் 100 சதவீத செறிவூட்டலுக்காக 2024-ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
• 2024 அக்டோபர் 2 அன்று பிரதமர் ரூ. 2,800 கோடி மதிப்பீட்டில் 40 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை திறந்து வைத்து, மேலும் 25 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
• பகவான் பிர்ஸா முண்டாவின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 2024 நவம்பர் 15 முதல் 2025 நவம்பர் 15 வரையிலான காலம் பழங்குடியினர் கௌரவ ஆண்டாக அனுசரிக்கப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்
• பழங்குடியின மாணவர்களுக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
• பழங்குடியினர் அதிகாரமளித்தல், முன்னேற்றத்திற்கான வரவு செலவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
• பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் (டிஏபிஎஸ்டி) என்று அழைக்கப்படும் பழங்குடியினர் துணைத் திட்டத்தின் (டிஎஸ்பி) கீழ், 42 அமைச்சகங்கள் / துறைகள் கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சாலைகள், வீட்டுவசதி, மின்மயமாக்கல், வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு போன்றவற்றில் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 4.3 முதல் 17.5 சதவீதம் வரை நிதி ஒதுக்குகின்றன.
2014-15-இல் வளர்ச்சி செயல் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு ரூ.21525 கோடியாக இருந்தது 2024-25இல் 1,24,908 கோடியாக அதிகரித்துள்ளது.
• 2024 அக்டோபர் 2 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் திட்டத்தை தொடங்கிவைத்தார். ரூ. 79,156 கோடிக்கும் அதிகமான செலவில் செயல்படுத்தப்படும் இந்த லட்சியத் திட்டம் சுமார் 63,843 பழங்குடி கிராமங்களில் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
• பழங்குடியினருக்கான அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, இந்தியாவில் 206 மாவட்டங்களில் உள்ள 28,700 பழங்குடியினர் குடியிருப்புகளில் அவை செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
• பல்வேறு இடைவெளிகளை நிரப்ப பழங்குடியினருக்காக மத்திய அரசின் 58 திட்டங்களை, மாநில அரசுகளின் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் 5 ஆண்டுகளுக்கு ரூ.7276 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• சிறு வனப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பட்டியலில் 87 சிறு வனப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
• சிறு வனப்பொருட்களை கொள்முதல் செய்வதற்காக மாநில அரசுகளுக்கு சுழல் நிதியாக ரூ.319.65 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.665.34 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
• அடுத்த மூன்று ஆண்டுகளில், 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 728 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள், உதவி ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
• ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் உள்ள பர்சாஹியில் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
• ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் உள்ள பாதாசாஹியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
• பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 50 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் ‘அமேசான் எதிர்கால பொறியாளர் திட்டத்தின்’ மூன்றாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
• பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமும், ஆயுஷ் ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து ஆயுர்வேத நடைமுறைகள் மூலம் பழங்குடியின மாணவர்களின் பரிசோதனை, சுகாதார மேலாண்மைக்கான தேசிய அளவிலான திட்டத்தை தொடங்கியுள்ளன.
• மத்திய அரசு பழங்குடியினருக்கான 5 கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
• 26 ஜனவரி 2024 அன்று இந்தியக் குடியரசின் வைர விழா கொண்டாட்டத்தின் போது, புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க 663 பழங்குடியின மாணவர்களை சிறப்பு விருந்தினர்களாக அரசு அழைத்து கௌரவித்தது.
• குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மணிப்பூர், மிசோரம், கோவா ஆகிய மாநிலங்களில் 2017-18 முதல் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக 11 அருங்காட்சியகங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
• கடந்த 10 ஆண்டுகளில், பழங்குடியின மக்களின் கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம் ஆகிய துறைகளில் செயல்படும் சுமார் 250 திட்டங்களுக்காக சுமார் 200 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் 1000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
• பழங்குடி சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய சுகாதார முயற்சிகளை அரசு தொடங்கியுள்ளது. அரிவாள் செல் ரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கம், மத்திய, மேற்கு, தென்னிந்தியாவில் உள்ள பழங்குடி மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, அத்திட்டத்தின் கீழ், 4.5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.