Sunday, January 18 2026 | 10:53:17 AM
Breaking News

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் அமைப்பை ஏற்படுத்துதல்

Connect us on:

நுகர்வோரின் குறைகளுக்குத் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பகுதி வாரியாக குறைகளைப் பகுத்தாய்வு செய்து தீர்வு காண வழி கிடைக்கும்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான அணுகுமுறை நுகர்வோர் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவாகவும், திறமையாகவும் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் வாயிலாக பெறப்படும் அழைப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும். 2015-ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் 12,553 அழைப்புகளாக இருந்த எண்ணிக்கை, 2024-ம் ஆண்டு டிசம்பரில் 1,55,138 அழைப்புகளாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.  இது அதிகரித்து வரும் நுகர்வோரின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

எனவே, அனைத்து நுகர்வோர்களும், 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி வசதியைப்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நுகர்வோர் https://consumerhelpline.gov.in/user/signup.php என்ற இணையதள முகவரியிலும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …