Friday, December 05 2025 | 10:02:50 PM
Breaking News

விவசாய நலனுக்கான எங்கள் முயற்சிகள் வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும்: பிரதமர்

Connect us on:

கடந்த 11 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான அரசின் ஆதரவு முயற்சிகளின் நீண்டகாலத் தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். இது விவசாய சமூகத்திற்கு கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்கான  குறிப்பிடத்தக்க வளர்ச்சி கட்டத்தைக் குறிக்கிறது.

பிரதமர் கிசான் சம்மான் நிதி மற்றும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு  போன்ற முக்கிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்துள்ளார். அவை விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கைகள் என்று அவர் விவரித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை  தொடர்ந்து அதிகரிப்பதால், நாட்டின் உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் பயிர்களுக்கு நியாயமான விலைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் வருமானத்திலும் உயர்வை அனுபவித்து வருகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது தமது அரசுக்கு கிடைத்த ஒரு பாக்கியம் என்று திரு  மோடி குறிப்பிட்டுள்ளார்.  கடந்த 11 எஆண்டுகளை நினைவுகூர்ந்து, அரசின் பல்வேறு முயற்சிகள் விவசாயிகளிடையே முன்னேற்றத்தை ஊக்குவித்ததுடன் மட்டுமல்லாமல், விவசாயத் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் பங்களித்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மண் வளம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற முக்கிய அம்சங்களில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதால்,  அவை பெரிதும் பயனளித்துள்ளன என்று பிரதமர் கூறியுள்ளார்.

விவசாய நலனுக்கான நமது முயற்சிகள் வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும் என்று கூறியுள்ள திரு மோடி, நமது விவசாயிகளின் கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்காக  நாங்கள் பணியாற்றியுள்ளோம் என்று  குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் எதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

“கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது எங்கள் பாக்கியம். கடந்த 11 ஆண்டுகளாக, எங்களின் பல்வேறு முயற்சிகள் விவசாயிகளின் முன்னேற்றத்தை ஊக்குவித்துள்ளன. இது விவசாயத் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் உறுதி செய்துள்ளது. மண் வளம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம், அவை பெரிதும் பயனளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்கான எங்கள் முயற்சிகள் வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும்.

#11YearsOfKisanSamman”

“எங்கள் விவசாயிகளின் கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்காக  நாங்கள் எவ்வாறு பணியாற்றியுள்ளோம் என்பதைப் பற்றிய ஒரு பார்வையைப் பெற இதனைப் படியுங்கள்.

#11YearsOfKisanSamman”

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …