அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற தகவல் தொடர்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளுக்கு வலுவான உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இது மொழி அடிப்படையிலான பிளவுகளை இணைத்து நாடு முழுவதும் தொலைதூரப்பகுதிக்கும் தகவல் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்கிறது.
கலாசேது: இந்தியாவுக்கான நிகழ்நேர மொழி சார்ந்த தொழில்நுட்பம்
அனைவரையும் உள்ளடக்கிய தகவல் தொடர்புக்கு செயற்கை நுண்ணறிவு ஆற்றலை பயன்படுத்துவது என்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலமான வேவெக்ஸ் புத்தொழில் தளமானது “கலாசேது- இந்தியாவுக்கான நிகழ்நேர மொழி சார்ந்த தொழில்நுட்பம்” என்ற போட்டியை அறிவித்துள்ளது.
இந்தப் போட்டி செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மூன்று உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. முதலாவது தகவலில் இருந்து வீடியோ உருவாக்கம். இரண்டாவது தகவலில் இருந்து வரைகலை உருவாக்கம், மூன்றாவது தகவலில் இருந்து ஆடியோ உருவாக்கம்.
இந்தப் போட்டிக்கு புத்தொழில் நிறுவனங்கள் https://wavex.wavesbazaar.com என்ற வேவெக்ஸ் இணையப் பக்கத்தின் (போர்ட்டல்) மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தங்கள் தயாரிப்பின் வீடியோ காட்சியுடன் 2025 ஜூலை 30-க்குள் குறைந்தபட்ச சாத்திய கோட்பாட்டை புத்தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக குறும்பட்டியலில் இடம்பெற்ற அணிகள் தங்களின் படைப்புகளை புதுதில்லியில் தேசிய நடுவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும்.
பாஷா சேது போட்டி
பாஷா சேது நிகழ்நேர மொழிப் பெயர்ப்பு போட்டிகள் வேவெக்ஸ் மூலம் 2025 ஜூன் 30 அன்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வேவெக்ஸ் போர்ட்டல் மூலம் 2025 ஜூலை 22 வரை புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
Matribhumi Samachar Tamil

