Tuesday, December 09 2025 | 10:03:37 AM
Breaking News

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

Connect us on:

தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கடந்த மாதம் (நவம்பர் 2025) 10-ம் தேதி ட்ராய் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை  இம்மாதம் (டிசம்பர் 2025) 8-ம் தேதிக்குள்ளும் அது தொடர்பான விமர்சனங்களை இம்மாதம் (டிசம்பர் 2025) 22-ம் தேதிக்குள்ளும் எழுத்து மூலம் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்துறை சங்கங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் முறையே இம்மாதம் (டிசம்பர் 2025) 15-ம் தேதி மற்றும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை மின்னணு முறையில் ட்ராய் அமைப்பின் (வலைதளம், அலைக்கற்றை, உரிமம்) ஆலோசகர் திரு சமிர் குப்தாவிற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அதன் நகலை [email protected] என்ற முகவரியிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள் மற்றும் தகவல்களை பெற ட்ராய் ஆலோசகர் திரு சமிர் குப்தாவின் தொலைபேசி எண்ணை (+91-11-20907752) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.