Wednesday, December 10 2025 | 05:51:19 AM
Breaking News

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

Connect us on:

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையெட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்த சிறப்புமிக்க தருணத்தில், கூட்டு விவாதத்திற்கான வழிமுறையை தேர்ந்தெடுத்ததற்காக அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தியாகம் மற்றும் தவத்தின் வழிமுறையைக் காட்டி, நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த வந்தே மாதரம் என்ற மந்திரமும், முழக்கமும் நினைவுகூரப்படுவதாகவும், அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இது ஒரு பெரிய வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நாடு காண்பது பெருமைக்குரிய அம்சம் என்று திரு மோடி எடுத்துரைத்தார். இந்தக் காலம் வரலாற்றின் எண்ணற்ற நிகழ்வுகளை நமக்கு முன் எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

வரலாற்றின் பல ஊக்கமளிக்கும் அத்தியாயங்கள் மீண்டும் நம் முன் வெளிப்படுத்தப்படும் தருணம் இது என்று திரு மோடி குறிப்பிட்டார். அண்மையில் நாடு அரசியல் சாசனத்தின் 75 ஆண்டுகளை பெருமையுடன் கொண்டாடியதை அவர் எடுத்துரைத்தார்.

சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150-வது பிறந்தநாளை நாடு கொண்டாடி வருவதாகவும், அண்மையில் குரு தேக் பகதூரின் 350-வது தியாக தினத்தை நாடு கொண்டாடியதாகவும் அவர் கூறினார்.

வந்தே மாதரத்தின் 150 ஆண்டு பயணம் பல மைல்கற்களைக் கடந்து வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை நினைவு கூர்ந்த திரு மோடி, அது 100 ஆண்டுகளை எட்டியபோது, நாடு அவசரகால சூழல்களால் பிணைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

வந்தே மாதரத்தின் நூற்றாண்டு விழாவின் போது, இந்திய அரசியல் சாசனம் நசுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். வந்தே மாதரம் பாடல் 100 ஆண்டுகளை எட்டிய போது, நாட்டிற்காக வாழ்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 1947-ம் ஆண்டில் நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டது வந்தே மாதரம் பாடல் என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தே மாதரத்தின் பின்னணியையும் அதன் மதிப்புகளையும் நாம் காணும்போது, வேத காலத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட ஒரு உண்மையை நாம் காண்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். வந்தே மாதரம் என்று நாம் கூறும்போது, இந்த நிலம் என் தாய், நான் அவளுடைய புதல்வன் என்ற வேத அறிவிப்பை அது நமக்கு நினைவூட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

About Matribhumi Samachar

Check Also

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் டிசம்பர் 8 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், …