Friday, January 10 2025 | 07:21:08 AM
Breaking News

2025 குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு

Connect us on:

2025 குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ‘மக்கள் பங்கேற்பை’ அதிகரிக்கும் நோக்கத்திற்கு ஏற்ப, 2025 ஜனவரி 26 அன்று புதுதில்லி கடமைப் பாதையில் 76- வது குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.  ‘ஸ்வர்னிம் பாரத்’ சிற்பிகளான பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களும், அரசின் திட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டவர்களும் இதில் அடங்குவர். சிறப்பு விருந்தினர்களின் சில பிரிவுகள் பின்வருமாறு:

வ.எண்                வகைமைகள்

1.    பஞ்சாயத்துத் தலைவர்கள்

2.    சிறந்த செயல்திறன் கொண்ட கிராமங்களின் பஞ்சாயத்துத்   தலைவர்கள்

3.    பேரிடர் நிவாரணப் பணியாளர்கள்

4.    துடிப்புமிக்க கிராமங்களைச் சேர்ந்த விருந்தினர்கள்

5.    சிறந்த  நீர் வீரர்கள்

6.    தொடக்க வேளாண் கடன் சங்கங்கள்

7.    சிறந்த செயல்திறன் கொண்ட நீர் அமைப்பு

8.    சிறந்த செயல்திறன் கொண்ட சமூக வள நபர்கள் (விவசாய தோழி,பணி  சார்ந்த  தோழி போன்றோர்)

9.    சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்

10.   வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தன்னார்வலர்கள் / தொழிலாளர்கள்

11.   கைத்தறி கைவினைஞர்கள்

12.   கைவினைக் கலைஞர்கள்

13.   பல்வேறு திட்டங்களின் சிறப்பு சாதனையாளர்கள் மற்றும்

     பழங்குடியின பயனாளிகள்

14.   ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்)

15.   மனதின் குரல் பங்கேற்பாளர்கள்

16.   எனது பாரத் தொண்டர்கள்

17.   பாராலிம்பிக் போட்டி & சர்வதேச வகை நிகழ்வுகளின் வெற்றியாளர்கள்

18.   வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டம், விவசாயிகள் உற்பத்தி அமைப்பு, பத்ம விருது பெற்ற விவசாயிகள் உள்ளிட்டோர்.

19.   பிரதமரின்  சூர்ய சக்தி பயன்பாட்டு வீடுகள் திட்டத்தினர்

20.   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலாளர்கள்

21.   பிரதமரின் உழவர் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கப் பயனாளிகள்

22.   அங்கன்வாடி பணியாளர்கள்

23.   சாலை கட்டுமான தொழிலாளர்கள்

24.   சிறந்த புத்தொழில் நிறுவனங்கள்

25.   சிறந்த காப்புரிமை வைத்திருப்பவர்கள்

26.   சிறப்பாக செயல்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகள்

27.   சிறப்பாக செயல்படும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத்திட்டப் பயனாளிகள்

28.   சிறப்பாக செயல்படும் தேசிய கோகுல் இயக்கப் பயனாளிகள்

29.   வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விருந்தினர்கள்

அழைக்கப்பட்ட விருந்தினர்களில் சிலர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வருமானம், வேலைவாய்ப்பு உருவாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்மாதிரி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம், குடிநீர், துப்புரவு, சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புகள் ஒருங்கிணைப்பு மற்றும் பாலின செயல்பாடுகள் ஆகியவற்றில் பணிபுரியும் சுய உதவிக் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பது மட்டுமின்றி, தேசிய போர் நினைவுச்சின்னம், பிரதமர்களின் அருங்காட்சியகம், தில்லியில் உள்ள பிற முக்கிய இடங்களுக்கு இந்த சிறப்பு விருந்தினர்கள் பயணம் செய்வார்கள். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் உரையாடும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைக்கும்.

About Matribhumi Samachar

Check Also

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 24.01.2025 அன்று நடைபெற உள்ளது

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு …