Friday, January 02 2026 | 10:32:50 AM
Breaking News

மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் வழங்க சிறப்புத் திட்டம்

Connect us on:

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-ன் போது பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் (ரேஷன் பொருட்கள்) வழங்குவது மத்திய அரசின் சிறப்புத் திட்டமாகும். நேஃபெட் (NAFED) எனப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் சார்பில் கோதுமை மாவு, பருப்பு வகைகள், அரிசி, பிற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. பக்தர்கள் வாட்ஸ்அப் அல்லது போன் அழைப்பு மூலமாக ரேஷன் பொருட்களை வாங்க ஆர்டர் செய்யலாம். 1000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ரேஷன் பொருட்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 20  வேன்கள் மூலம் மகாகும்பமேளா நகரத்திலும் பிரயாக்ராஜ் முழுவதிலும் விநியோகம் நடந்து வருகிறது.

ஆசிரமங்களுக்கும், பக்தர்களுக்கும் மலிவு விலையில் ரேஷன் பொருட்களை நடமாடும் வேன்கள் விநியோகிக்கின்றன. மகா கும்பமேளாவில் துறவிகள், கல்பவாசிகள், பக்தர்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக, நடமாடும் வேன்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. எந்தவொரு பக்தரும் உணவு தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த சிறப்புத் திட்டம் கூட்டுறவு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது என்று நேஃபெட்-டின் (NAFED) மாநிலத் தலைவர் ரோஹித் ஜெயின் தெரிவித்தார். ஒவ்வொரு நபரும் தங்களுக்கான உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்வதற்காக நேஃபெட்-டின் மேலாண்மை இயக்குநர் திரு தீபக் அகர்வால் மேற்பார்வையிடுகிறார்.

மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் 72757 81810 என்ற எண்ணில் அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப் மூலம் ரேஷன் பொருட்களுக்கான ஆர்டர்களை வழங்கலாம். மானிய விலையில் ரேஷன் பொருட்களில் கோதுமை மாவு, அரிசி 10 கிலோ பாக்கெட்டுகளிலும், பாசிப்பருப்பு, மசூர், கடலை பருப்பு ஆகியவை 1 கிலோ பாக்கெட்டுகளிலும் விநியோகிக்கப்படுகின்றன.  ஆணைகள் பெறப்பட்டவுடன் நடமாடும் ஊர்திகள் மூலம் ரேஷன் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஆசிரமங்களுக்கும் துறவிகளுக்கும் உடனடியாக வழங்கப்படுகின்றன.

இதுவரை, 700 மெட்ரிக் டன் கோதுமை மாவு, 350 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் 10 மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. நேஃபெட்டின் தயாரிப்புகளும் ‘பாரத் பிராண்ட்’ தானியங்களும் பக்தர்களிடையே விரைவாக பிரபலமடைந்து வருகின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக் கணக்கான பக்தர்களுக்கு உயர்தர ரேஷன் பொருட்களை அரசு வழங்குவது மட்டுமல்லாமல், இந்த செயல்முறையை வசதியாகவும் எளிதாகவும் அமைந்துள்ளது.  மகா கும்பமேளா 2025, ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு மறக்கமுடியாத சிறப்பான அனுபவமாக இருப்பதை உறுதி செய்கிறது.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 125 சாலைகளில் ஆய்வு மேற்கொண்டது காற்றுத் தர மேலாண்மை ஆணையம்

குருகிராம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவை தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம்  26.12.2025 அன்று விரிவான …