இந்திய கடற்படை தலைவர்களின் மாநாடு புதுதில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் 2025 பிப்ரவரி 08 முதல் 09 வரை நடைபெற்றது. இதில் எட்டு முன்னாள் கடற்படை தளபதிகளும் தற்போதைய கடற்படை தளபதியும் கலந்து கொண்டனர்.
முன்னாள் தளபதிகளின் கூட்டு அனுபவத்திலும் அறிவிலும் இருந்து பயனடைவதும், கடற்படையின் சமீபத்திய முன்னேற்றங்கள், கொள்கை முயற்சிகள் குறித்து அவர்களுக்கு விளக்குவதும் மாநாட்டின் நோக்கமாகும்.
பிப்ரவரி 08 அன்று, முன்னாள் தலைவர்களுக்கு கொள்கை முன்முயற்சிகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் விளக்கப்பட்டன.
வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சூழலில் கடல்சார் உத்திகள் குறித்து விவாதிக்க ஒரு பிரத்யேக அமர்வும் நடத்தப்பட்டது.
முன்னாள் கடற்படை தளபதிகள் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் கடல்சார் சக்தியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அதே வேளையில், கடந்த கால தலைமையின் அனுபவத்தைப் பெற்று தொடர்ச்சியான மேம்பாட்டுக்கான கடற்படையின் உறுதிப்பாட்டை இந்த மாநாடு உறுதிப்படுத்தியது.
Matribhumi Samachar Tamil

