Saturday, December 06 2025 | 11:12:51 PM
Breaking News

உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் 2025-ல் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

Connect us on:

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் 2025-ம் ஆண்டு ஜனவரி 20 முதல் 24 தேதி வரை  நடைபெறவுள்ள 55- வது உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது.  செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன்களை விரிவுபடுத்துவது, உலக நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் முன்னேற்றம்  குறித்து “அறிவார்ந்த யுகத்திற்கான ஒத்துழைப்பு.” என்ற கருப்பொருளில் விவாதிக்ப்படவுள்ளது.

இந்த மாநாட்டை மையமாகக் கொண்டு பொருளதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்தல், முதலீடு,  நாடுகளிடையே நம்பிக்கையை  ஏற்படுத்துதல், அறிவார்ந்த யுகத்தில் தொழில்கள், புவி பாதுகாப்பு ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களில் தீர்வுகளை  கண்டறிவதற்கான ஆய்வுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

முக்கிய அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவால் வழிநடத்தப்படும் ஒரு தேசம், ஒரே குரலாக நாட்டின் வளர்ச்சி குறித்த ஒருங்கிணைந்த கருத்துகள்  இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட இருக்கின்றன. ரயில்வே, தகவல் & ஒலிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு கே.ராம்மோகன் நாயுடு, உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இந்திய பிரதிநிதிகள் குழுவை வழிநடத்துவார்கள்.

About Matribhumi Samachar

Check Also

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 99.86 சதவீத படிவங்கள் விநியோகம்

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,40,24,854 படிவங்கள் …