Saturday, January 17 2026 | 04:21:09 PM
Breaking News

நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட மொபைல் சேவைகள் குறித்த அறிக்கையை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது

Connect us on:

புதுதில்லி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), அகமதுநகர் (மகாராஷ்டிரா) , ஹைதராபாத் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய நான்கு நகரங்களில்  இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது அதிகாரப்பூர்வ முகமை மூலம் வெளிப்படையான சோதனையை நடத்தியது. குரல், தரவு சேவைகளுக்கான செல்லுலார் மொபைல் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் சேவை தொடர்பான தரத்தை மதிப்பீடு செய்வதற்கு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் பாரதி ஏர்டெல் நிறுவனம், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்களின் செயல்திறன், சேவைகளுக்கான உரிமம் பெற்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள்

 (2G/ 3G/ 4G/ 5G போன்றவை) ஆகியவற்றின் குரல், தரவு போன்ற சேவைகளும் இடம் பெற்றுள்ளன.

பிராந்தியத்தில் செயல்படும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின்  தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகளின் குரல், தரவு சேவைக்கான  செயல்திறன் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டன. அவற்றின் விவரம் பின்வருமாறு,

1  குரல் சேவைகள்:

1.  அழைப்பு அமைப்புமுறை வெற்றி விகிதம்

2.  அழைப்பு பாதியிலேயே துண்டிக்கப்படும் விகிதம் (DCR)

3.  எம்.ஓ.எஸ்.ஐப் பயன்படுத்தி பேச்சு தரம் (சராசரி கருத்து மதிப்பெண்)

4.  டவுன்லிங்க் & அப்லிங்க் பாக்கெட் (குரல்) துண்டிப்பு விகிதம்

5.  குரல் இல்லாத அழைப்பு விகிதம்

6.  கவரேஜ் (%)- சிக்னல் வலிமை

1.  தரவு சேவை:

1.  தரவு செயல்திறன் (டவுன்லிங்க் மற்றும் அப்லிங்க் இரண்டும்)

2.  பாக்கெட் டிராப் ரேட் (டவுன்லிங்க் & அப்லிங்க்)

3.  வீடியோ ஸ்ட்ரீமிங் தாமதம்

4.  தாமதம்

5.  தடுமாற்றம்

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …