Thursday, January 01 2026 | 06:45:57 PM
Breaking News

சவால்களுக்கு தீர்வு காண கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ‘யோசனை மற்றும் புத்தாக்கம் போட்டியை’ என்.சி.சி தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்

Connect us on:

தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் இன்று (ஜனவரி 10) புதுதில்லியின் சஃப்தர்ஜங்கில் உள்ள என்.சி.சி கட்டிடத்தில் ‘யோசனை மற்றும் புதிய கண்டுபிடிப்பு போட்டியை’ தொடங்கி வைத்தார். என்.சி.சி குடியரசு தின முகாமில் (ஆர்.டி.சி) முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தனித்துவமான முயற்சியானது என்.சி.சி. மாணவர்களுக்கு விமர்சன ரீதியாக சிந்திக்கவும் நிஜ உலக சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கவும் உதவக்கூடிய கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியது.

போட்டிக்கு முன்பு, அனைத்து 17 என்.சி.சி மாநில இயக்குநரகங்களின் கீழ் இந்தியா முழுவதும் தொடர்ச்சியான பயிலரங்குகள் மற்றும் போட்டிகளை ஏற்பாடு செய்தது.

என்.சி.சி. மாணவர்களின் உள்ளார்ந்த விருப்பங்களை ஊக்குவிப்பதற்கும் பூர்த்தி செய்வதற்கும் இந்த முயற்சி குறிப்பிடத்தக்க முடிவுகளை அளித்தது.  மாணவ வீரர்கள் கவனத்தை ஈர்க்கக்கூடிய 256 புதுமையான யோசனைகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கினர். இவற்றில், 56 சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2025 குடியரசு தின முகாமில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகள் மாணவர்களின் சிந்திக்கும் திறனை எடுத்துக்காட்டியதோடு படைப்பாற்றல், குழுப்பணி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது.

யோசனை & புத்தாக்கப் போட்டியானது மாணவர்களின் கவனத்தை ஆக்கிரமித்ததோடு அவர்களிடையே தொழில்முனைவு, பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் புதுமை உணர்வு ஆகியவற்றை வலியுறுத்தியது. இந்த முயற்சிகள் எதிர்கால தலைவர்களை வளர்ப்பதற்கான என்.சி.சி.யின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன் மட்டுமல்லாமல்,  சமூக சவால்களை எதிர்கொள்வதில் இளம் மனங்களின் திறனை அதிகரிக்கவும் செய்தன. என்.சி.சி பயிற்சியை சமகால அம்சங்களுடன் சீரமைப்பதும், மாணவர்களுக்கு ‘யுவ சேது’ வை நோக்கிய வெளிப்பாடு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு அவர்களைத் தயார்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுமத்தின் கூட்டத்தில், பாதுகாப்புப் படைகளின் பல்வேறு …