விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தரநிலை குழுக்களின் அறிவியல் ஆசிரியர்களுக்காக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம், “தரநிலைகள் மூலம் அறிவியலைக் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயிற்சியை ஏ.கே.டி நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இன்றும் (ஜூலை 10, 11) நாளையும் நடத்துகிறது. இதன் துவக்க விழா இன்று (ஜூலை 10, 2025) நடைபெற்றது.
இந்தப் பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகத்தின் இணை இயக்குநர் திரு. அருண் புச்சகாயாலா, இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். “தரநிலைகள் மூலம் அறிவியலைக் கற்றல்” என்பது, அடிப்படை அறிவியல் கருத்துக்களை தரம் மற்றும் தரப்படுத்தல் நடைமுறைகளுடன் இணைப்பதன் மூலம் மாணவர்களின் அறிவியல் ஆர்வம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சி இது என்று கூறினார். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மூலம், பிஐஎஸ் அன்றாட தயாரிப்புகளில் அறிவியல் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் வகுப்பறையில் உள்ள கற்றல் நடைமுறைகளைக் கடந்து நேரடி செய்முறைப் பயிற்சி மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. இந்தப் பயிற்சி 4 முதல் 5 பாடத் திட்டங்களில் நடத்தப்பட உள்ளன. பிஐஎஸ் தரநிலைக் கழகங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கென பிரத்யேகமாக மாதாந்திர தேசிய அளவிலான வினாடி வினா போட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தரம் மற்றும் தரநிலைகள் குறித்த புரிதலுடன் மாணவர்களை தயார்படுத்துவதன் மூலம் நாட்டின் தர சுற்றுச்சூழல் அமைப்பிற்கு எதிர்கால பங்குதாரர்களாக அவர்களை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டு நாள் நடைபெறும் இந்தப் பயிற்சித் திட்டத்தின் பல்வேறு அமர்வுகளை பிஐஎஸ் அமைப்பின் வள ஆதரவுக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஏ. பாஸ்கர் நடத்துகிறார் . இதில் பயிற்சிப் பெற்றவர்களுக்கு தரப்படுத்தல், சான்றிதழ், சோதனை, பயிற்சி மற்றும் கல்வி ரீதியான தொடர்பு ஆகியவற்றின் கண்ணோட்டத்தை உள்ளடக்கியதாக அமையும்.
மொத்தம் 30 அறிவியல் ஆசிரியர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றனர்.
Matribhumi Samachar Tamil

