Sunday, January 25 2026 | 09:43:52 AM
Breaking News

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான அரசு மற்றும் தொழில்துறையினர் உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்

Connect us on:

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் ஸ்வீடன் அரசின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

அமைச்சர் திரு கோயல் உடனான சந்திப்பில் சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் திரு. பெஞ்சமின் டௌசா மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான செயலாளர் திரு. ஹக்கன் ஜெவ்ரெல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியா-ஸ்வீடன் வர்த்தகம், முதலீட்டு கூட்டாண்மையின் நோக்கத்தை விரிவுபடுத்துதல், நிலையான தொழில்துறை ஒத்துழைப்பை எளிதாக்குதல், தொழில்நுட்பம், புதுமை சார்ந்த வளர்ச்சிக்கான முக்கிய பகுதிகளை அடையாளம் காண்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

இந்தியா-ஸ்வீடன் பொருளாதார, தொழில்துறை மற்றும் அறிவியல் ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 21வது அமர்வு இந்த பயணத்தின் போது நடைபெற்றது. இந்த அமர்விற்கு வெளிநாட்டு வர்த்தகத்திற்கான செயலாளர் திரு. ஹக்கன் ஜெவ்ரெல், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர் திரு. சஞ்சீவ் மற்றும் வணிகத் துறையின் இணைச் செயலாளர் திரு. சாகேத் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். புதுமை மற்றும் ஆராய்ச்சியில் உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் இந்தியா-ஸ்வீடன் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்த விவாதம் ஆகியவை இதில் இடம் பெற்றன.

இந்தியா-ஸ்வீடன் வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் திரு. கோயல் உரையாற்றினார். ஸ்வீடன் தொழில்துறையின் முக்கிய உறுப்பினர்களுடனும் அவர் கலந்து உரையாடினார். இந்தியாவில் செயல்படுத்தும் ஒழுங்குமுறை சூழல், வளர்ந்து வரும் நுகர்வோர் தளம், திறமையான குழு மற்றும் சிறப்பான தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்த நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …