Saturday, January 03 2026 | 07:31:02 AM
Breaking News

2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கோடைகால பாசிப்பயறும் உத்திரப்பிரதேசத்தில் நிலக்கடலையும் கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல்

Connect us on:

2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2025–26 கோடை பயிர் பருவத்திற்காக உத்தரப் பிரதேசத்தில் 50,750 மெட்ரிக் டன் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, மாநில விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், ஆந்திரப் பிரதேசத்தில் கொள்முதல் காலத்தை மேலும் 26.06.25 தேதி வரை என 15 நாட்களுக்கு நீட்டிப்புச் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

விவசாயிகளை ஊக்குவிக்கவும், இறக்குமதியை நாடு சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உள்நாட்டு பருப்பு வகைகளின் உற்பத்தியை மேம்படுத்தவும், 2024–25 கொள்முதல் ஆண்டிற்கு அந்தந்த மாநிலத்தின் உற்பத்தியில் 100 சதவீதம் வரை கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 2028–29 வரை கூடுதலாக நான்கு ஆண்டுகளுக்கு இந்த முயற்சி தொடரும் என்று 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு அறிவித்தது.

பிரதமரின் விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கும் திட்டம்  என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது விலை ஆதரவு திட்டம், விலை பற்றாக்குறையை சரி செய்யும் திட்டம், சந்தை தலையீட்டு திட்டம் மற்றும் நிலையான விலைக்கான நிதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உறுதியான மற்றும் லாபகரமான விலைகளை உறுதி செய்வதாகும். இதன் மூலம் அவர்களின் வருமானத்தைப் பாதுகாப்பதும், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். அறுவடை காலத்தில் அறிவிக்கப்பட்ட பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் சந்தை விலைகள் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறையும் போது விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக கொள்முதல் விலை ஆதரவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …