தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் தற்சார்பு நிலையை அடைவதற்கு நாட்டில் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில், டிஜிட்டல் இந்தியா திட்டமானது இளைஞர்கள் புதுமைகளைப் படைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ள தாகவும் அவர் கூறினார். இது உலக அளவில் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதாக உள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில், தொழில்நுட்பப் பயன்பாடு நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கியுள்ளதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். சேவைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்க இந்தத் திட்டம் வகை செய்துள்ளதாகவம் அவர் கூறினார்.
மைகவ் இந்தியா தளத்தில் உள்ள பதிவுகளுக்கு சமூக ஊடக எக்ஸ் தளம் மூலம் பதிலளித்துள்ள திரு நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது:
“நாட்டில் உள்ள இளைஞர்கள், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது தற்சார்பு இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கும் தொழில்நுட்பத்தில் உலகின் வலிமையான நாடாக இந்தியா உருவெடுப்பதற்கும் வழி வகுத்துள்ளது. இது சுயசார்புடையதாகவும் உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாகவும் மாறுவதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துகிறது.
“தொழில்நுட்பத்தின் வலிமையை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கப்படுகின்றன. சேவை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இதன் மூலம் அதிகரித்துள்ளது. மேலும் தொழில்நுட்பப் பயன்பாடு ஏழைமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வழி வகுத்துள்ளது”.
Matribhumi Samachar Tamil

