இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள் மதிப்புமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பாரம்பரிய பட்டியலில் 12 கம்பீரமான கோட்டைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளன. 1 கோட்டை தமிழ்நாட்டில் உள்ளது.
மராட்டிய பேரரசின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ள பிரதமர், “நாம் புகழ்பெற்ற மராட்டிய பேரரசைப் பற்றிப் பேசும்போது, அதை நல்லாட்சி, ராணுவ வலிமை, கலாச்சார பெருமை, சமூக நலனுக்கு முக்கியத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகிறோம். சிறந்த ஆட்சியாளர்கள் எந்த அநீதிக்கும் தலைவணங்க மறுப்பதன் மூலம் நம்மை ஊக்குவிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மராட்டிய பேரரசின் வளமான வரலாற்றைப் பற்றி அறிய இந்த கோட்டைகளைப் பார்வையிடுமாறு பிரதமர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் உட்பட, 2014-ம் ஆண்டு ராய்காட் கோட்டைக்கு விஜயம் செய்தது போன்ற நினைவுகளையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த அங்கீகாரம் குறித்த யுனெஸ்கோவின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:
“இந்த அங்கீகாரத்தால் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இந்த ‘மராட்டிய ராணுவ நிலப்பரப்புகளில்’ 12 கம்பீரமான கோட்டைகள் அடங்கியுள்ளன. அவற்றில் 11 மகாராஷ்டிராவில் உள்ளன. 1 தமிழ்நாட்டில் உள்ளது.
புகழ்பெற்ற மராட்டியப் பேரரசைப் பற்றி நாம் பேசும்போது, அதை நல்லாட்சி, ராணுவ வலிமை, கலாச்சார பெருமை, சமூக நலனில் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகிறோம். சிறந்த ஆட்சியாளர்கள் எந்த அநீதிக்கும் தலைவணங்க மறுப்பதன் மூலம் நம்மை ஊக்குவிக்கிறார்கள்.
இந்த கோட்டைகளைப் பார்வையிடவும், மராட்டியப் பேரரசின் வளமான வரலாற்றைப் பற்றி அறியவும் அனைவரையும் நான் இந்தக் கோட்டைகளுக்கு அழைக்கிறேன்.”
“2014-ம் ஆண்டில் ராய்காட் கோட்டைக்கு நான் சென்றபோது எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்கிறேன். சத்ரபதி சிவாஜி மகாராஜை வணங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பயணத்தை எப்போதும் பெருமையுடன் போற்றுவேன்.”
Matribhumi Samachar Tamil

