Friday, December 12 2025 | 02:01:28 AM
Breaking News

மகா கும்பமேளா: எல்லைகளைத் தாண்டிய கொண்டாட்டம்

Connect us on:

மஹா கும்பமேளாவுக்கான பினாரின் பயணம் ஒரு கனவுடன் தொடங்கியது. துருக்கி நாட்டின் குடிமகளான அவர், இந்தியாவின் வளமான கலாச்சாரம் பற்றி ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். மஹா கும்பமேளா குறித்த நம்பிக்கை, பாரம்பரியம், மனிதநேயம் ஆகியவற்றின் சங்கமம் பற்றிய கதைகளை நீண்டகாலமாக அவர் கேட்டிருந்தார். 2025 ஜனவரியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித இடத்தில் நின்றபோது அவரது கனவு நனவாகியது.

பினார், பாரம்பரிய இந்திய உடையை அணிந்து, கங்கையில் புனித நீராடினார். இது சனாதன தர்மத்தில் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்ட பாவம் நீங்கி புண்ணியமடைதல் செயலாகும். நெற்றியில் திலகமிட்ட அவரை, புனித நீர் தழுவிய கணத்தில் தெய்வீகத்தில் தன்னை முழுமையாக அவர் மூழ்கடித்துக் கொண்டார். பினாரைப் பொறுத்தவரை, இது கண்டங்களைக் கடந்த பயணம் மட்டுமல்ல, ஆழமான ஆன்மீக விழிப்புணர்வும் ஆகும்.

புனித நதிகளின் சங்கம மண்ணில் நடை போட்டதும், கங்கையில் புனித நீராடியதும் தம்மால் மறக்க முடியாத அனுபவங்கள் என்று  கூறி, சனாதன தர்மத்தின் மீதான தனது புதிய புரிதலையும், மரியாதையையும் வெளிப்படுத்தினார்.

மகா கும்பமேளா 2025 இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீகக் கூடுகையாக மட்டுமின்றி, லட்சக்கணக்கானவர்களை ஈர்க்கும் உலகளாவிய கலாச்சார நிகழ்வாகவும் திகழ்கிறது.  இந்த உலகளாவிய ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய, உத்தரபிரதேசத்தின் யோகி அரசு டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொண்டு மகா கும்பமேளா 2025 ஐ “டிஜிட்டல் மகா கும்பமேளா” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த முயற்சியின் மையப்பகுதி https://kumbh.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளமாகும். இது மகா கும்பமேளாவின் அனைத்து அம்சங்களையும் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. பாரம்பரியங்கள் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் முதல் பயண வழிகாட்டுதல்கள் மற்றும் தங்குமிட விருப்பங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் போர்ட்டல் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்  நாடுகின்ற ஒரே இடமாக விளங்குகிறது. முக்கிய இடங்கள், முக்கிய நீராடல் திருவிழாக்கள், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை,  ஊடக காட்சியகங்கள் ஆகிய அனுபவத்தை இது உறுதி செய்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் மட்டும், 183 நாடுகளைச் சேர்ந்த 33 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த இணையதளத்தை அணுகியுள்ளனர்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.