Wednesday, January 07 2026 | 12:18:41 PM
Breaking News

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் சுகாதார இயக்கத்தை செயல்படுத்தும் 34-வது மாநிலமாக ஒடிசா சேர்ந்துள்ளது

Connect us on:

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார ஆணையம் ஒடிசா மாநில அரசின் சுகாதார, குடும்ப நலத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதையடுத்து, ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தை செயல்படுத்திய 34-வது மாநிலமாக ஒடிசா இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தேசிய நெடுஞ்சாலை முகமையின் தலைமை செயல் அதிகாரியுமான திருமதி எல்.எஸ். சங்சன், அம்மாநில அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறையின் ஆணையர் மற்றும் செயலாளர் திருமதி எஸ் அஸ்வதி, இடையே கையெழுத்தானது. ஒடிசா மாநில முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி முன்னிலையில் மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூயல் ஓரம், மத்திய ரயில்வே, தகவல், ஒளிபரப்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்,  ஒடிசா துணை முதலமைச்சர் திரு கனக் வர்தன் சிங் தியோ, மற்றும் டாக்டர் முகேஷ் மகாலிங், அம்மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டம் ஒடிசாவில் தற்போது நடைமுறையில் உள்ள கோபபந்து மக்கள் சுகாதார திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 1.03 கோடி குடும்பங்கள் பயனடையும். ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் வரும், 67.8 லட்சம் குடும்பங்கள் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  பயனடையும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜே.பி.நட்டா, “இன்று ஒடிசாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்று குறிப்பிட்டார்.  பிரதமரின் மக்கள் சுகாதார திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் மட்டுமின்றி, பல்வேறு மருத்துவக் காப்பீடுகளை வழங்கும் திட்டமாக உள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …