Wednesday, December 10 2025 | 12:45:22 PM
Breaking News

உலகளாவிய எரிசக்தி உரையாடலை மறுவரையறை செய்ய இந்திய எரிசக்தி வாரம் 2025

Connect us on:

இந்திய எரிசக்தி வாரம் 2025-க்கு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆதரவின் கீழ், இந்திய பெட்ரோலிய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது புதுதில்லி, யசோபூமி மாநாட்டு மையத்தில், 2025 பிப்ரவரி 11 முதல் 14 வரை நடைபெற உள்ளது.

உலகளாவிய நிகழ்வான இந்திய எரிசக்தி வாரம் 2025, இந்த ஆண்டின் மிகவும் விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய உலகளாவிய எரிசக்தி நிகழ்வாக இருக்கும்.

2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியா எரிசக்தி வாரம் மாநாடு பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய எரிசக்தி வாரம் 2025 மற்ற சர்வதேச எரிசக்தி நிகழ்வுகளை விஞ்சியுள்ளது. இது உயர்ந்த தலைமைத்துவ பங்கேற்பு மற்றும் அதிக ஆக்கப்பூர்வமான  விவாதங்களை எடுத்துக் காட்டுகிறது.

முக்கிய சர்வதேச, உள்நாட்டு எரிசக்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 70 தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த நிகழ்வில்  பங்கேற்க உள்ளனர். வளர்ச்சி அடைந்த பொருளாதார நாடுகள் , மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் மற்றும் உலகளாவிய தெற்கின் முக்கிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 20-க்கும் மேற்பட்ட  வெளிநாட்டு எரிசக்தித்துறை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் உட்பட இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் 120 நாடுகளைச் சேர்ந்த 70,000-க்கும் அதிகமான பிரதிநிதிகள்,  700-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையெட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். …