Saturday, January 17 2026 | 12:05:03 PM
Breaking News

மேற்கு வங்காளம் புருலியா மாவட்டத்தில் உள்ள புதிய வானாய்வு நிலையமானது வானியற்பியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்

Connect us on:

மேற்கு வங்க   மாநிலம் புருலியா மாவட்டத்தின் கர்பஞ்சகோட் பகுதியில் பஞ்செட் மலையின் உச்சியில் அமைந்துள்ள அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான எஸ்என்போஸ் அறிவியல் மையத்தால் அமைக்கப்பட்டுள்ள புதிய வானாய்வு நிலையமானது வானியற்பியல் அடிப்படையிலான கணிப்புகள், தொலைநோக்கிகளைக் கையாளுதல், தரவுகளைப் பதிவு செய்தல் ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளது. வானியல் ஆராய்ச்சியில் தேசிய, சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குதல், ஆய்வுப் பணிகளில் உள்ள இடைவெளியயைக் குறைத்தல் உள்ளிட்ட அம்சங்களிலும் இந்த  நிலையம் கவனம் செலுத்தும்.

தரை மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்திலும், 86° கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்துள்ள இந்த ஆய்வகம், கிழக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வகமாக இருக்கும். சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை நீடிக்கும் நிலையற்ற வானியல் நிகழ்வுகளை கணிப்பதற்கு, உலகின் அனைத்து தீர்க்கரேகைகளிலும் சிறந்த நல்ல ஆய்வகங்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரபல வானியல் ஆய்வாளரும் அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். எஸ்என்போஸ் மையம் சித்து கானு பிர்சா பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

எஸ்என்பிசிபிஎஸ் நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் பி.என்.ஜக்தாப், ரகுநாத்பூர் எஸ்.டி.ஓ திரு விவேக் பங்கஜ் மற்றும் எஸ்.என்.பி.சி.பி.எஸ் விஞ்ஞானிகள் மெய்நிகர் முறையிலான ஆய்வகத்தின் தள திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …