Wednesday, September 16 2026 | 11:11:42 PM
Breaking News

யோகா இணைப்பு 2025 : ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா என்பது குறித்து மெய்நிகர் முறையில் உலகளாவிய உச்சிமாநாடு புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது

Connect us on:

11-வது சர்வதேச யோகா தினத்தின் முன்னோட்டமாக புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜூன் 14) யோகா இணைப்பு என்ற உலகளாவிய மெய்நிகர் உச்சிமாநாட்டை ஆயுஷ் அமைச்சகம் நடத்தவுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த யோகா குருக்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார நிபுணர்கள், வர்த்தக தலைவர்கள், ஆய்வாளர்கள், உலக அளவில் செல்வாக்கு செலுத்துவோரை இந்த உச்சிமாநாடு ஒருங்கிணைக்கும்.

யோகா துறையில் உயர்நிலை ஆய்வு அமைப்பான யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. சர்வதேச அளவிலான யோகா கல்வி நிறுவனங்கள், நல்வாழ்வு அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள். பஹ்ரைன், அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இதில் பங்கேற்பார்கள்.

இந்த உச்சிமாநாட்டையொட்டி கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச யோகா தினத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் தேசிய அளவில் ஆய்வு செய்த யோகாவின் பயன் குறித்த அறிக்கை வெளியிடப்படும். இந்த அறிக்கை கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொது சுகாதார தொழில்முறையாளர்கள் ஆகியோருக்கு பயன்படுவதாக இருக்கும்.

யோகாவின் பத்தாண்டு கால தாக்கம் (மின்-நூல்), யோகா ஆராய்ச்சியின் அறிவியல் பூர்வ பகுப்பாய்வு அறிக்கை, இந்திய மரங்கள் மற்றும் அவற்றின் பொருத்தப்பாட்டை எடுத்துரைக்கும் படங்களைக் கொண்ட கையேடு ஆகியவையும் இந்த உச்சிமாநாட்டில் வெளியிடப்படும்.

சுவாமி பாபா ராம்தேவ், ஆச்சார்ய பாலகிருஷ்ணா, எச் ஆர் நாகேந்திரா, புத்த பிட்சு சங்சேனா, பரத்பூஷண் உள்ளிட்ட யோகாத்துறை நிபுணர்களின் பங்கேற்பு, யோகா இணைப்பு என்ற இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக இருக்கும்.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …