Thursday, December 18 2025 | 04:15:03 PM
Breaking News

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பம்பாய் ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டார்

Connect us on:

பாம்பே ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் விளையாட்டு சிறப்புமிக்க பாரம்பரியம் மற்றும் தேசத்திற்கு அதன் நீடித்த கலாச்சார பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் துறை ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது.

இந்த நினைவு தபால் தலையை மும்பையில் உள்ள பம்பாய் ஜிம்கானாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய  சிந்தியா முறையாக வெளியிட்டார். பம்பாய் ஜிம்கானாவின் தலைவர் திரு சஞ்சீவ் சரண் மெஹ்ரா,  நவி மும்பை பிராந்தியத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமிகு சுசிதா ஜோஷி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய திரு ஜோதிராதித்ய  சிந்தியா, விளையாட்டைப் போலவே, இந்த அஞ்சல் முத்திரையும் கதைகளையும் மதிப்புகளையும் சுமந்து செல்கிறது. இளம் சிறுவர் சிறுமிகள் விளையாட்டுகளில் ஈடுபடவும், சுறுசுறுப்பாக இருக்கவும், வாழ்க்கையை நேர்மறையாக வடிவமைக்கும் நிறுவனங்களின் சக்தியை நம்பவும் தூண்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பம்பாய் ஜிம்கானா, இந்தியாவின் விளையாட்டு மற்றும் சமூக பாரம்பரியத்தின் ஒரு தனித்துவமான தூணாக நிற்கிறது. பல தலைமுறை விளையாட்டு வீரர்களை வளர்த்து வருகிறது, அதே நேரத்தில் கலாச்சார மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்கான துடிப்பான மையமாகவும் செயல்படுகிறது. ஒன்றரை நூற்றாண்டு காலமாக, விளையாட்டுத்திறன், தோழமை மற்றும் வலுவான சமூக ஈடுபாட்டு உணர்வை வளர்ப்பதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர …